2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 409ன் கீழ் நம்பிக்கை துரோக வழக்கை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் கடந்த மாதம் 26ம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் 409-ம் பிரிவின் கீழ் நம்பிக்கை துரோக மோசடி என்ற புதிய

குற்றச்சாட்டை இந்த 17 பேர் மீதும் சிபிஐ பதிவு செய்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். இதனால் சிபிஐயின் இந்த புதிய குற்றச்சாட்டுக்கு 17 பேரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந் நிலையில் இன்று இது தொடர்பாக நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவு பிறப்பித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும், ரிலையன்ஸ்
டெலிகாம், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120ன் கீழ் கிரிமினல் சதி (criminal conspiracy) குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:

Leave a Reply