சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development ), ’ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தங்கள் அரசாங்கத்தின்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள்’ என்னும் ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு முடிவை ’Government at a Glance 2017’ என்னும் தலைப்பில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் 73% இந்திய மக்கள் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்து , இந்தியாவை இந்த பட்டியலில் முதலிடத்தில் இடம்பெறச் செய்துள்ளனர். இது சாதாரண விஷயமன்று. உலகின் செழுமை மிக்க வறுமை இல்லாத கனடா 62% ஆதரவுடன் 2ஆம் இடத்தில இருக்கிறது. அமெர்க்கவோ 30% ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது. சராசரியாக பெரும்பான்மையான உலக நாடுகள் 45% மக்களின் ஆதரவைக் கூட பெறமுடியவில்லை.

இது உலகின் பெரும்பன்யான மக்கள் நம்பிக்கை இன்மையாலும், பொருளாதார நிலையின்மையாலும், பொருத்தமற்ற ஆட்சியாளர்களாலும் அவதிப்படுவதையே காட்டுகிறது    . ஆனால் மக்கள் நலன் சார்ந்த பல கடினமான முடிவுகளை எடுத்த போதிலும் 73% மக்களின் ஆதரவை பெற்று மோடி அரசு முதலிடத்தை பிடித்திருப்பது மக்களின் நம்பிக்கையை பெற்ற தலைவராக தொடர்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் காட்டுகிறது.

 

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்கும் முன்பு வரை, அவர் பிரதமரானால் நாட்டில் மதக்கலவரம் வெடிக்கும், சிறுபான்மையினர் நசுக்கப்படுவர், பாகிஸ்தானுக்கு விரட்டப்படுவர், அயோத்தியில் ராமர் கோவில் உடனே கட்டப்பட்டு விடும் என்றெல்லாம் எதிர்மறைப் பிரச்சாரங்கள் கடுமையாக பரப்பப் பட்டன.

ஆனால் அவரோ  ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அனைத்துத் தரப்பையும் அரவணைத்த திட்டங்களையே வகுத்து வருகிறார். அனைவருக்கும் வங்கி திட்டம், வங்கியுடன் மானியங்களை இணைத்தது, ஆதர் அட்டையை கட்டாயமாக்கியது, 1000,500 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. ஜிஎஸ்டி வரி என கடுமையான சீர்த்திருத்தங்களை செய்தும் வருகிறார்.  இருப்பினும்  இதனால் ஏற்ப்படும்  அசௌகரியங்களால்  கோபப்படும்  சாமனியன், கருத்துக் கணிப்பு, தேர்தல் என்று வரும்போது விட்டுத்தருவதில்லை, மாறாக பஜக.,வுக்கு வாக்குகளை அள்ளித்தந்து மோடியை புகழ்ந்தும் மகிழ்கிறான்.

 

இதன் வெளிப்பாடுதான் உயர் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்ற பின்னர்  நடந்த 5ந்து மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப்பை தவிர்த்து உபி, உத்தராகண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக பெற்ற அபார வெற்றியும். சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் கிடைத்த முன்னிலையும்.

நன்றி தமிழ் தாமரை VM வெங்கடேஷ்

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.