ஹிந்து மதத்தை பல்வேறு ஆபத்துகளிலிருந்து காக்க பாடுபட்டுபவர் சுவாமி தயானந்த சரஸ்வதி என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; சுவாமி தயானந்த சரஸ்வதி சித்தாந்தங்களை காக்கவும், பாதுகாக்கவும்

பாடுபட்டுவருகிறார். நாட்டையும், சமுகத்தையும் ஆரம்பத்திலிருந்து காப்பதற்க்காக செயல்பட்டுவருகிறார். அவரை சந்தித்து பழகிய வாய்ப்பு கிடைத்தபிறகு, எனது சிந்தனையிலும், கோட்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது.

மதமாற்றத்தை ஒரு வன் முறை என கூறியவர். இந்த சித்தாந்தத்தை உலகமே ஏற்று கொண்டுள்ளது . பணம் தந்தோ , ஆசைகாட்டியோ மத மாற்றத்தினில் ஈடுபடுவது பாவ செயலாகும். ஒருவர் விருப்பத்தின் படி மதம் மாறுவது தவறில்லை.

2002ல் ஹிந்து தர்ம ஆச்சார்ய சபை உருவாக காரணமாக இருந்தவர். இந்துக்களுக்காக போராடவும், பாடுபடவும் ஒருஅமைப்பு உருவாவதற்கு காரணமானவர் . உலகில் யூதர்களிடம் மட்டும் தான் மத மாற்றம் இல்லை. அதேபோன்று ஹிந்துமதம், மத மாற்றத்தில் ஈடு படுவதில்லை. நமது பாரம் பரியத்தையும், மதத்தையும் இஸ்ரேலிய யூதகுருமார்கள் புரிந்துகொண்டார்கள். 2,000 ஆண்டுகளாக ஹிந்து மதத்தைபற்றி அவர்களுக்கு இருந்த தவறான எண்ணம் மாறியது. அதைதொடர்ந்தே இந்தோ-யூத ஒப்பந்தம் உருவானது .

இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு இஸ்ரேலுடன், இந்தியா பலதுறைகளில் இணைந்து பணியாற்றுகிறது. சனாதன தர்மத்தையும், அத்வைத_வேதாந்தத்தையும் சுவாமி தயானந்த சரஸ்வதி பரப்பிவருகிறார் என்றார்

Leave a Reply