கிராமப்புறங்களில் மருத்துவ மாணவர்கள் ஓராண்டு பணியாற்றுவது கட்டாயமாக்கப்படும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம்நபி ஆஸாத் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது : கிராமங்களில் 3 ஆண்டுகள் பணிபுரிவோருக்கு மருத்துவமேற்படிப்பில் (எம்.டி.)

சேர 50% இட ஒதுக்கீடும், ஓராண்டு பணிபுரிவோருக்கு 10 மதிப்பெண்ணும் பின்தங்கிய கிராமப்புறங்களில் பணிபுரிவோருக்கு 30 மதிப்பெண்களும் வழங்கபடும் என அரசு அறிவித்திருந்தது. அதன் பிறகும் கிராமப் புறங்களில் பணிபுரிய மருத்துவர்கள் ஆர்வம்காட்டவில்லை.

எனவே கிராமப்புறங்களில் மருத்துவர்கள் ஓராண்டு பணிபுரிவதை கட்டாயமாக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு என்றார் .

Tags:

Leave a Reply