மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்று ஆண்டு சாதனை என்னவோ ஊழல், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் தான் என்று பா,.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின்கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியது: மக்களிடையே அதிருப்தி நிலவிவருகிறது . நாட்டில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக செயற் குழு கூட்டத்தில் விவாதிக்கபடும். இந்திய பொருளாதாரம் கவலை தரும் விதமாக உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பஞ்சாபை நாம் தக்கவைத்து கொண்டிருகிறோம். கோவாவை கைப்பற்றியுள்ளோம் . மும்பை, தில்லி, நாகபுரி மாநகராட்சி தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆந்திர இடை தேர்தலில் நாம் வென்றுள்ளோம். கட்சியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்றார்.

Leave a Reply