சிபிஎம் கட்சியினர் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் மாவோயிஸ்டுகள் போன்று பேசுவதாக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சாடியுள்ளார்.

கேரள இடுக்கி மாவட்ட சி.பி.எம் கட்சியின் செயலாளர் எம். மணி அரசியல் எதிரிகளை அக் கட்சி கொலைசெய்த சம்பவங்கள்

நடந்துள்ளதாக தெரிவித்திருந்தார் .

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நரேந்திர மோடி

எங்களின் அரசியல் எதிரிகளை கொலைசெய்வோம் என ஒரு அரசியல் கட்சியின் தலைவர் கூறுகிறார் எனில் அது நமது ஜன நாயகத்திற்கு ஆபத்தானது. மனித உரிமை ஆணையங்கள் எங்கே போனது? இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக நாம் குரல்கொடுக்க வேண்டும். இதையேல்லாம் கேட்டு விட்டு மத்திய அரசு என்ன தூங்கி கொண்டிருக்கிறதா? இந்தவிவகாரம் குறித்து கேரள அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது?

சி.பி.எம் கட்சியை சேர்ந்த தலைவர் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் மாவோயிஸ்டுகள் போன்றல்லவா பேசுகிறார் என்றார்.

Tags:

Leave a Reply