குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட கூடாதுஅரிசி ஏற்றுமதியில் ஊழல், கடற்படை ரகசியங்களை கசிய விட்டது போன்ற விஷயங்களில், பிரணாப் முகர்ஜிக்கு இருக்கும் தொடர்பு குறித்து தனியாக ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர் .

இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பிரணாப் முகர்ஜி ஏற்கனவே வெளியுறவு துறை அமைச்சராக இருந்தபோது, கானாவுக்கு அரிசி ஏற்றுமதிசெய்ததில், ரூ 2,500 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக தகவல் வெளியாயின.மேலும், இவர், ராணுவ மந்திரியாக இருந்த போது, கடற் படை ரகசியங்கள்_கசிந்தன. இந்திய ராணுவத்துக்கு நீர் மூழ்கி கப்பல் வாங்கியதில் ஊழல் நடந்ததாகவும் புகார் கிழம்பியது.

பிரணாபுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய தனியாக ஒரு குழு வை அமைத்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட கூடாது என கூறினர்.

Tags:

Leave a Reply