ஜஸ்வந்த் சிங் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் துணை ஜனாதிபதிதேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போட்டியிடுவார் என மூத்த பி.ஜே.பி தலைவர் எல்கே.அத்வானி அறிவித்தார்.

டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் கலந்துகொண்டன. இந்தகூட்டத்திற்கு பின்னர் பி.ஜே.பி.,யின் மூத்த தலைவர் எல்கே.அத்வானி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயக_கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கபட்டது. இந்ததேர்தலில் பி.ஜே.பி கூட்டணியின் சார்பில் போட்டியிட முடிவுசெய்யப்பட்டது. பி.ஜே.பி,யின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங்கை இந்ததேர்தலில் நிறுத்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஜஸ்வந்த் சிங்கிற்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறோம் என்று அத்வானி கூறினார்.

ஜனாதிபதி_தேர்தலில் பிரணாப்புக்கு ஆதரவு தர தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா உள்ளிட்டவை முடிவு செய்துள்ளன. இருப்பினும் துணை ஜனாதிபதி தேர்தலில் கூட்டணிவேட்பாளரை ஆதரிக்க இருகட்சிகளும் முடிவுசெய்துள்ளன. எனவே காங்கிரஸ் வேட்பாளரான ஹமீது அன்சாரிக்கு போட்டி கடுமையாகியுள்ளது

Leave a Reply