இப்புத்தக வடிவில் உள்ள “தொழிலாளர் கையேடு”, ஆங்கிலம் மற்றும் இந்தி
மொழிகளில் மட்டுமே இதுவரை தொழிலாளர்களின் நலம் கருதி வெளியிடப்பட்டு
இலவசமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை,
தொழிலாளர்களுக்கு இக்கையேட்டை தமிழ் மொழியில் வழங்கினால், எளிதில்
தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வழிவகுக்கும் என்ற அடிப்படையில் முடிந்தவரை
எளிய தமிழில் இக்கையேடு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இ.எஸ்.ஐ. திட்டத்தில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்கள், தொழில்
முனைவோர்கள், தொழில் முனைவோர் நலச் சங்கங்கள் மற்றும்
தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நலனைக் கருத்தில் கொண்டு, இந்நூல் கோவை
மாநகரில் இயங்கிவரும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சார் மண்டல
அலுவலகத்தினால் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தாலும், இதை சட்ட
ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு ஆவணமாக கொள்ளத்தக்கதல்ல. இ.எஸ்.ஐ.
திட்டத்திலுள்ள பலன்கள், நிபந்தனைகள் மற்றும் தொழிலாளர்களின்
கடமைகள், உரிமையுள்ள கோரிக்கைகள், போன்றவற்றை அறிந்துகொள்ள
ஏதுவாக இந்நூல் துணை நிற்கும் எனும் நோக்கில் மகிழ்ச்சியுடன் முதன் முதலாக
இக்கையேடு எளிய வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இக்கையேட்டை மேலும் எளிமையான தமிழில் அனைத்துத் தரப்பினரும்
பயன் பெறும் பொருட்டு வழங்க ஏதுவாக தங்களிடமுள்ள கருத்துக்கள் மற்றும்
ஆலோசனைகள் அனைத்தும் அன்புடன் வரவேற்கப்படுகின்றன.

இந்நூல் எளிய தமிழ் நடையில் வெளியிட பெரிதும் பணியாற்றிய
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் கோவை சார் மண்டல அலுவலர்கள்
மற்றும் மக்கள் தொடர்புத்துறையினருக்கும் எனது வாழ்த்துக்களையும்
நன்றியையும் கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜே.எச்.நாயக்
இணை இயக்குநர்
இ.எஸ்.ஐ. கழக சார் மண்டல அலுவலகம்
கோயம்புத்தூர்.

” இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பன்”.

அன்பார்ந்த காப்பீட்டாளர்களே,

இ.எஸ்.ஐ. நலத்திட்டம் ஒன்று மட்டுமே, இந்தியாவில் சமூக பாதுகாப்பு
வழங்கும் பல்நோக்கு சமூக நலத் திட்டம் என்பது உங்களுக்கு தெரிந்ததே. இந்த
நலத்திட்டம் பயனாளிகளுக்கு பரவலான சுகாதார பராமரிப்பு சேவைகள்
வழங்கவும், தொழிலாளர்களுக்கு பணியில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு
அதனால் அவர்கள் ஊதியத்தை இழத்தல் அல்லது சம்பாதிக்கும் திறனை இழத்தல்
போன்ற சந்தர்ப்பங்களில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பளிக்கும்
நோக்கத்துடன் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு, பயனுள்ளதாக அமையவும்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், உடல் ஊனமுற்ற தொழிலாளர்களையும்
பராமரிக்கிறது. செய்யும் வேலையால் ஏதாவது நோய்வாய்பட்டால் அல்லது
வேலை செய்யும் போது உடல் ஊனம் ஏற்படுமேயானால் அதற்கு தற்காலிக
அல்லது நிரந்தர ஊன உதவித்தொகையோ அல்லது செய்யும் வேலையினால்
மரணம் சம்பவித்தால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்துக்கு பொருளாதார
உதவிகளையும் இத்திட்டம் வழங்குகிறது.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், இ.எஸ்.ஐ. மருத்துவ மனைகள்
நோய் கண்டறியும் மையங்கள், மருந்தகங்கள் மற்றும் கிளை அலுவலகங்கள்
போன்ற சுமார் 5,000 சேவை மையங்களை இ.எஸ்.ஐ. திட்ட அமலாக்கம்
செய்யப்பட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் சுலபமாக அμகவும், மருத்துவ
வசதிகளையும் பண உதவிகளையும் பெற்றுக் கொள்ளவும் நிறுவியுள்ளது.

எனவே இத்திட்டத்தின் சுகாதார காப்பீட்டின் கீழ் கிடைக்கும் வசதிகள்,
பலன்கள், திட்ட செயலாக்கங்களை முழுமையாக தெரிந்து கொள்வது மிகவும்
முக்கியமாகும். அவ்வாறே முழு ஆர்வத்துடன் இ.எஸ்.ஐ. சட்டத்தின் கீழ் நீங்கள்
ஆற்ற வேண்டிய கடமைகளையும் தெரிந்து கொள்வதும் முக்கியமாகும். இந்த
சிறு தொழிலாளர்கள் கையேடு தொழிலாளர்களுக்கு கிடைக்கக் கூடிய மொத்த
பயன்கள், செலுத்த வேண்டிய சந்தா, திட்டத் தில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும்
செயலாக்க விஷயங்களுக்கு தேவைப்படும் எல்லா விவரங்களையும்
அளிப்பதற்கென்றே சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த சிறு கையேட்டின் மூலம், தங்களுக்கு எழும் பிரச்சனைகள்
சந்தேகங்களுக்கெல்லாம் பதில் கண்டு விட முடியாது. நலத்திட்டம் எப்படி
செயலாக்கப்படுகிறது, அல்லது எவ்வாறு நடைமுறையில் உள்ளது என்பதை
நீங்களோ அல்லது உங்களின் சக ஊழியர்களோ, தெரிந்துகொள்ள விரும்பினால்,
உங்கள் அருகாமையில் உள்ள கிளை அலுவலக மேலாளர் அல்லது உங்கள்
மருந்தகத்தின் பொறுப்பு மருத்துவ அலுவலரை நேரில் சந்தித்து தீர்வு காணலாம்.

எங்களின் மிகச் சிறந்த சேவையை என்றென்றும் உங்களுக்கு அளிக்க
வாக்குறுதி அளிக்கிறோம்.

இ.எஸ்.ஐ. கழக தலைமை அலுவலகம்.
புது தில்லி.

இந்திய தொழிலாளர் அரசு காப்பீட்டுத்திட்டம்
அடிப்படை அம்சங்கள்

தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் சமூக பாதுகாப்புடன்
ஒருங்கிணைந்த பல்நோக்கு நலத் திட்டமாகும். இது தொழிலாளர் அரசு
காப்பீட்டுச் சட்டத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு
அவ்வப்பொழுது நேரிடும் சுகவீனம், பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு,
வேலை செய்யும் போது விபத்தினால் ஏற்படும் தற்காலிகமான அல்லது
நிரந்தரமான ஊனம் மற்றும் மரணம், சம்பவிக்கும் காலங்களில் பண உதவி
வழங்கியும் தொழிலாளர்கள் தாம் செய்யும் வேலையால் ஏற்படும் சுகவீனம்,
தற்காலிக இயலாமை போன்ற காலங்களில் தொழிலாளர்களுக்கும் அவரது
குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் உரிய முழு மருத்துவச் சேவையுடன் கூடிய
பராமரிப்பை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு, சட்டச்செயல் வடிவம்
கொண்டு அமல் செய்யப்பட்டுள்ளது.

முதலாவதாக உற்பத்தி நோக்கிற்காக, (10) பத்து அல்லது அதற்கும்
மேற்பட்ட தொழிலாளர்களை சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்தி • மின்விசையும்
பயன்படுத்தும் தொழிலகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காப்பீடு
வழங்கப்படுகிறது. (தற்பொழுது மாதம் ரூ.10,000/- வரை ஊதியம் பெறும்
தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்).

( • விலங்குகள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் விசையாற்றல்
இ.எஸ்.ஐ.சட்டத்தின்படி விசையாற்றலாக கணக்கில் கொள்ளத்தக்கதல்ல).

இரண்டாவதாக உற்பத்தி நோக்கிற்காக, இருபது அல்லது அதற்கும்
மேற்பட்ட தொழிலாளர்களை சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்தி விசை ஆற்றல்
ஏதும் பயன்படுத்தாமல், தொழிலகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும்
காப்பீடு வழங்கப்படுகிறது. (தற்பொழுது மாதம் ரூ.10,000/- வரை ஊதியம் பெறும்
தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்).

இறுதியாக இருபது அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை
சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்கள், மற்றும் மாநில அரசு
வரையறை செய்யும் ஏனைய இதர நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களும்
இ.எஸ்.ஐ. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அவைகளில் பணிபுரியும்
தொழிலாளர்களுக்கும் (மாதம் ரூ.10,000/ – வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள்)
இக்காப்பீட்டுத் திட்ட பலன்கள் விரிவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

தற்பொழுது மாதம் ஒன்றிற்கு ரூ.10,000/- வரை ஊதியம் பெறும்
தொழிலாளர்கள் மட்டுமே, இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உரிய
பலன்களை பெற்றுக்கொள்ளும் வசதி மத்திய அரசினரால் அங்கீகரிக்கப்பட்டு
நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
™ மாதம் ஒன்றிற்கு ரூ.10,000/ -க்கும் மேல் ஊதியம் பெறும்
தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. சட்ட விதிகள் மற்றும்
அமலாக்கங்கள் தற்பொழுது நடைமுறைப்படுத்த வழிவகைகள்
இல்லை. ஆனால் இ.எஸ்.ஐ.சட்ட ஊதிய உச்சவரம்பு மத்திய
அரசினரால் மாற்றியமைக்கத் தக்கதாகும்.
™ மேலும் இ.எஸ்.ஐ. சட்ட அமலாக்கம் செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட
பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு
மட்டுமே இ.எஸ்.ஐ. சட்ட விதிகள் மற்றும் அமலாக்கங்கள்
பொருந்தும்.

உடல் நலக்குறைவு, செய்யும் வேலையால் ஏற்படும் உடல் ஊனம் போன்ற
எதிர்பாராத உபத்திரவங்களிலும், மகப்பேறு காலத்திலும் முழு மருத்துவ
பராமரிப்பை வழங்கவும், உதவித்தொகை வழங்குவதின் மூலம் தொழிலாளர் அரசு
காப்பீட்டுத் திட்டம் உங்கள் பொருளாதார இழப்புகளை ஈடு செய்து உங்களின்
ஆபத்து காலங்களில் உதவும் நண்பனாக விளங்குகிறது.

தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம், பணிகளை நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறது. முழு மருத்துவ பராமரிப்பு வழங்குவதின் மூலம் உடல் நலத்தை
நீங்கள் மீண்டும் பெறச் செய்து வேலை செய்யும் திறனை உங்களில் மீண்டும்
கொண்டு வர முயற்சி செய்கிறது.

தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டமானது, தொழிலாளர் அரசு
காப்பீட்டுக் கழகம் என்ற ஒரு சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பால்
நிர்வகிக்கப்படுகிறது. இதன் நிலைக்குழுவில் தொழிலாளர் பிரதிநிதிகள், நிறுவன
உரிமையாளர் பிரதிநிதிகள், மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள், மருத்துவ
நிபுணர் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் உறுப்பினர்களாக
இருக்கின்றனர். இந்த இ.எஸ்.ஐ. கழகத்தின் தலைமை நிர்வாக அலுவலராக
டைரக்டர் ஜெனரல் செயல்படுகிறார். இவரே இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷனின் பதவி
வழி செயலர் உறுப்பினராகவும், செயலாற்றுகிறார்.

இ.எஸ்.ஐ. திட்டத்தின் தேசிய அளவில் நிலைக்குழு (கார்ப்பரேஷனின்
பிரதிநிதித்துவ அமைப்பு) மற்றும் மெடிக்கல் பெனிபிட் கவுன்சில் ஆகிய இந்த
இரு அமைப்புகள் நிர்வாகம் மற்றும் மருத்துவ பயன்கள் குறித்து
கார்ப்பரேஷனுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றது.

மண்டல வாரியம் மற்றும் உள்ளூர் கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டு எல்லா
நிலைகளிலும் ஒன்று சேர்ந்த நலம் காக்கும் குழுமங்கள் நியமிக்கப்பட்டு
இத்திட்டமானது சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டத்தினால் பயன்பெறுவோர்

இ.எஸ்.ஐ. காப்பீட்டுக்கழகம், காப்பீடு பெற்ற தொழிலாளர்களின்
நலன்காக்கும் நம்பகமிக்க, உறுதுணையான அமைப்பாக இருந்து வருகிறது.
நாடெங்கும் அமைந்துள்ள மாநில மண்டல அலுவலகங்கள், கிளை
அலுவலகங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவற்றின் மூலமாக இது
தன் பொறுப்புகளையும், ஆற்ற வேண்டிய பணிகளையும், கடமைகளையும் சரிவர
நிறைவேற்றி வருகிறது.

இத்திட்டத்தின் அமலாக்கம் பொருந்தியிருக்கக்கூடிய தொழிற்சாலைகளில்
பணிபுரியும், மாதம் ரூ.10,000/- வரை ஊதியம் பெறும் அனைத்து
தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பை அளிக்கிறது. தொழிற்சாலை அல்லது
நிர்வாகத்தின் ஏதாவது பகுதியில், தொழிற்துறை நிறுவனத்தில் அல்லது கிளையில்
நிர்வாக பொறுப்பு சம்பந்தமாக ஊதியத்துக்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட
நபர்கள் அல்லது தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்களில் கச்சா
பொருட்களை வாங்குவதற்கும், அங்கு உற்பத்தியாகும் பொருட்களை
விநியோகிப்பதற்கோ, அல்லது விற்பனை செய்வதற்கோ, ஈடுபட்டிருக்கக்கூடிய
நபர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அளிக்கப்படுகிறது.

சுரங்கங்கள், ரயில்வேக்கள் நடத்தும் ஷெட்டுகள், கடற்படை, தரைப்படை,
மற்றும் விமானப்படை ஒர்க்ஷாப்புகள் மற்றும் ஆண்டு முழுவதும் வேலையின்றி
பருவம் சார்ந்த சமயங்களில் இயங்கும் சில குறிப்பிட்ட தொழிலகங்கள்
இத்திட்டத்திலிருந்து விலக்குப்பெறுகின்றன.

இத்திட்டம் காப்பீடு பெற்ற நபர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும்
முழு மருத்துவ காப்பீட்டை அளிக்கிறது. காப்பீடு பெற்ற நபர் பணியில் ஈடுபட்டு
இருக்கும் போது விபத்தினால் மரணமடைந்தால் அவரின் குடும்பத்தினர்
சார்ந்தோர் உதவித்தொகை பெறக்கூடிய தகுதியடைகிறார்கள்.

தொழிலாளர் அரசு காப்பீட்டிற்கான நிதி

தொழிலாளர் அரசு காப்பீட்டிற்கான நிதி, காப்பீடு சட்ட வரையறைக்குள்
அமையப்பெற்ற தொழிலகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு காப்பீடு பெற்ற
தொழிலாளியின் மாத ஊதியத்தில் தொழிலாளியின் சந்தாத் தொகை 1.75 சதவீதம்
எனவும், காப்பீடு பெற்ற நிறுவன உரிமையாளர்களின் பங்கு ஒவ்வொரு காப்பீடு
பெற்ற தொழிலாளியின் மாத ஊதியத்தின் அளவில் பங்குசந்தாத்தொகை 4.75
சதவீதம் என்கிற அளவில் மத்திய அரசினால் மாதந்தோறும் செலுத்தப்படும்
வகையிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செலுத்தப்படும் சந்தாத்தொகை குறிப்பிட்ட கால வரையறைக்குள்
இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷனின் நிதி கணக்கில் தொழிலாளர் மற்றும் தொழில்
முனைவோரின் மொத்த சந்தாத் தொகையையும் செலுத்துவது தொழிலக
உரிமையாளர்களின் கடமையாகிறது.

சராசரி தினக்கூலி அதிகபட்சம் ரூ.70 /- வரை பெறும் தொழிலாளர்கள் தமது
பங்கு சந்தாத் தொகையை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளார்கள்.
இருப்பினும் அவர்களுக்கு உரிய தொழிலக உரிமையாளர்களின் சந்தாத்தொகை
தொழிலக உரிமையாளர்களால் செலுத்தப்படவேண்டியதாகும்.

நிர்ணயிக்கப்பட்ட தொழிலாளியின் பங்குத்தொகையை அவர்களது
ஊதிய விகிதத்திற்கேற்ப அந்தந்த மாதத்திலேயே பிடித்தம் செய்து குறிப்பிட்ட
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் செலுத்த
வேண்டிய பொறுப்பு தொழிலக உரிமையாளர்களைச் சார்ந்ததே.

திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்துகொள்ளும் முறை

இத்திட்டத்தில் பதிவு பெற்றுள்ள தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில்
வேலைக்கு சேர்வதை தொடர்ந்து, தொழிலாளி ஒவ்வொருவரும் ஒரு தன் விவர
அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்து குடும்ப புகைப்படத்துடன் கொடுக்க
வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு காப்பீட்டு அடையாள
அட்டை அளிக்கப்படுகிறது. ஒரு நபர் காப்பீடு பெற்றுள்ள வேலையில் ஒரு
முறை பதிவு செய்தல் மட்டுமே போதுமானது.

அடையாள அட்டை

இத்திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற நிறுவனத்தில் வேலைக்கு
சேர்ந்ததும் தொழிலாளி தான் அளித்த தன் விவர அறிவிப்பு படிவத்தின்
அடிப்படையில் அவருக்கு காப்பீடு பெற்ற நபர் என்ற தற்காலிக அடையாளச்
சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது மூன்று மாத காலத்திற்கு செல்லுபடியாகத்
தக்கதாகும். இந்த காலகட்டத்துக்குப்பின் காப்புறுதி பெற்ற நபர் தொடர்ந்து
பணியில் இருந்தால் இந்த சான்றிதழுக்கு பதிலாக நிரந்தர அடையாள அட்டை
வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டையில் காப்புறுதி பெற்ற
தொழிலாளரின் கையப்பம் அல்லது (வலது அல்லது இடது) கை பெருவிரல்
ரேகையை பதிவு செய்ய வேண்டும். இந்த அடையாள அட்டை, காப்பீடு பெற்ற
நபர் தன்னை அடையாளம் காட்டுவதற்கு உதவுகிறது. மருந்தகம் மற்றும்
மருத்துவமனைகளில் மருத்துவ பராமரிப்பு பெறவும், இ.எஸ்.ஐ. கார்பரேஷனின்
கிளை அலுவலகங்களில் உதவித்தொகை பயன்களை பெறவும் இந்த அடையாள
அட்டை பயன்படுகிறது.

வேறு நிறுவனங்களுக்கு மாறுதலாகிச் செல்லும் பட்சத்தில் இரண்டாம்
முறை காப்பீட்டுப் பதிவினை தவிர்க்க, இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு
பெற்றிருக்கும் சான்றாக புதிய தொழிலக உரிமையாளரிடம் இந்த அடையாள
அட்டையைக் காண்பித்தல் போதுமானது.

மருத்துவ பயன்கள், காப்புறுதி பெற்ற தொழிலாளியின் குடும்பத்தினருக்கும்
கிடைக்கப்பெறுவதால், தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும்,
அவர்களைப் பற்றிய விவரங்களும் அடையாள அட்டையில் தரப்பட்டு, குடும்ப
உறுப்பினர்களுடன் கூடிய புகைப் படம் அதில் ஒட்டப்படுகிறது.

அடையாள அட்டை தொலைந்து போகும் பட்சத்தில் கிளை
அலுவலகத்தில் தகுந்த அறிவிப்பின் பேரில் நகல் அடையாள அட்டை
பெற்றுக்கொள்ளலாம்.

பங்குத்தொகை மற்றும் பயனளிக்கும் காலங்கள்

இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்ற தொழிலாளர்கள் மாதாந்திர
அடிப்படையில் இந்த திட்டத்திற்கு பங்களிப்பு செலுத்துகிறார்கள். பங்களிக்கும்
காலம் ஆனது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலும்
மற்றும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரையிலும் கூடிய
இரு ஆறுமாத காலகட்டங்களாகும். எனவே ஒரு நிதியாண்டில் ஆறு மாத
காலமாக இரண்டு பங்குத்தொகை காலங்கள் உள்ளன.

அவ்வாறு செலுத்தப்படும் மாதாந்திர சந்தாத்தொகை அம்மாதத்தினை
அடுத்து வரும் மாதத்தின் 21 ஆம் தேதிக்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையின் அளவு பொதுவாக
செலுத்திய பங்குத்தொகையின் அடிப்படையில் அமைந்துள்ளது. பயனளிக்கும்
காலம் பங்குத்தொகை செலுத்தும் காலம் முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகே
ஆரம்பிக்கிறது. இரண்டு வகையான கால கட்டங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

பங்குத்தொகை செலுத்துவதற்£ன
காலம்

பங்களிப்பினைத் தொடர்ந்த
பயனளிக்கும் காலம்

ஏப்ரல்1-ஆம் தேதி முதல் செப்டம்பர்¢
30-ஆம் தேதி வரை.

அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மார்ச்
31-ஆம் தேதி வரை.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜுன் 30-ஆம் தேதி வரை.

ஜுலை 1- ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை.

கிளை அலுவலகம்

திட்டம் செயலாக்கத்தில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் இ.எஸ்.ஐ.
கழகத்தின் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளது. கிளை அலுவலகங்கள்
காப்பீடு பெற்ற தொழிலாளர்களின் உடல் நலக்குறைவு பிரசவம், உடல் ஊனம்
மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கான எல்லா விதமான
உதவித்தொகைகளையும் பெறுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. கிளை
அலுவலகங்கள் காப்பீடு பெற்றவரின் சந்தேகங்களையும், கோரிக்கைகளையும்,
நிவர்த்தி செய்கிறது. உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை
பூர்த்தி செய்ய உதவுவதோடு அவற்றைப் பெறுவதற்கான எல்லா
நெறிமுறைகளையும் வழிவகுத்து உதவுகிறது. இந்த அலுவலகங்கள் அந்தந்த
பகுதியைச்சேர்ந்த தொழிலக உரிமையாளர்களுடன் தக்க தொடர்பு
கொண்டுள்ளன. கிளை அலுவலக நிர்வாகியாக கிளை மேலாளர்
நியமிக்கப்பட்டுள்ளார். அவர்¢ துணை மண்டல அலுவலகத்தின் ஆணைப்படி
செயல்படுகிறார். மேலும் கிளை அலுவலக மேலாளர் அந்தப் பகுதியின் குறைதீர்
அதிகாரியாகவும் செயல்படுகிறார். அவர் மருத்துவம் மற்றும் உதவித்தொகைப்
பயன்கள் பற்றிய தொழிலாளர்கள் மற்றும் தொழ¤ல்முனைவோர்களின்
குறைகளைக் கேட்டறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்க பணிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவச் சான்றிதழ்

நோய்க்கால உதவித்தொகை பயன்கள் பெற இ.எஸ்.ஐ. மருத்துவ அலுவலர்
மூலமாக பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ் படிவத்தை இ.எஸ்.ஐ.
கார்ப்பரேஷனின் கிளை அலுவலகத்தில் மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க
வேண்டும். மருத்துவ சான்றிதழ்கள் ஏழு நாட்களுக்கும் மிகாத இடைவெளிகளில்
வழங்கப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால்
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 4 வாரங்களுக்கும் மிகாமல் மருத்துவச் சான்றிதழ்
(ஸ்பெஷல் இன்டர்மீடியேட் ஸர்டிபிகேட்) வழங்கப்படுகிறது. ஒவ்வொரு
சான்றிதழின் பின்புறத்திலும் பண உத வித்தொகை கோரிக்கை விண்ணப்ப படிவம்
அச்சிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு விண்ணப்பம் செய்யும் கால கட்டத்தில்
வேலையிலிருந்து விடுப்பில் இருப்பதற்கான அறிவிப்பு செய்யும் ஒரு
அத்தியாவசியமான அறிவிக்கையும் இதில் அடங்கியுள்ளது. தனியாகவும்
விண்ணப்ப படிவங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

காப்பீடு பெற்ற தொழிலாளர்கள் தங்களது பண உதவிக் கோரிக்கை
விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து அதில் கையப்பம் அல்லது
தங்களது வலது அல்லது இடது கைப்பெருவிரல் ரேகையை பதிவு செய்ய
வேண்டும். படிவத்தை தானே நேரடியாகவோ, பிரதிநிதி மூலமாகவோ, தபால்
மூலமாகவோ, சான்றிதழ் சேகரிப்பு பெட்டிக்குள்ளோ அல்லது கிளை
அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும். பெரும்பாலும் எல்லா
விண்ணப்பங்களையும் விடுப்பு எடுத்த மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களுக்காக, கிளை அலுவலக வரவேற்பாளர், உங்களது கோரிக்கை படிவங்களை
பூர்த்தி செய்ய உங்களுக்கு உதவுவார்.

1. நோய்க்கால உதவி

காப்பீடு பெற்ற தொழிலாளர்கள் தங்களின் உடல் நலக்குறைவினால்
ஏற்படும் நோய் காலங்களில் தகுந்த மருத்துவ சிகிச்சை பெற்று, வேலையிலிருந்து
விடுப்பு தேவைப்படும் பொழுது தங்களது நோய்க்காலத்திற்கான ஊதியம்
நிறுவனங்களில் பெற இயலாத நிலையில் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ்
பொருளாதார உதவியை நோய்க்கால உதவித்தொகையாக இ.எஸ்.ஐ.கழகம்
வழங்குகிறது. பணியில் சேர்ந்து 9 மாதங்கள் முடிவடைந்த பிறகே
இவ்வுதவித்தொகையைப் பெற தகுதியடைகிறார்.

தொழிலாளி உரிய பங்களிப்பு கால கட்டங்களில் குறைந்த பட்சம் 78
நாட்களுக்கு அவர்களது தொழிலகங்களில் பணி செய்து தனது பங்குத்தொகையை
செலுத்தியிருந்தால் அவர் அவரது பங்களிப்பு விகிதாச்சாரத்தின் படி நோய்க்கால
உதவித்தொகை பெற இயலும். இவ்வாறு பெறும் நோய்க்கால உதவித்தொகை
அவரது அன்றாட ஊதியத்தில் தோராயமாக பாதியளவு இருக்கும். உதவித்தொகை
அளவீடு 42 பிரிவுகளாக நிர்ணயிக்கப்பட்டு அட்டவணை இடப்பட்டுள்ளது.

நோய்க்கால உதவித்தொகையானது அதிகபட்சமாக 91 நாட்களுக்கு
மிகாமல் இரு பயன் அளிக்கும் கால கட்டங்களில் வழங்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் தக்க பரிந்துரையின் பேரில் நோய்க்கால
உதவித்தொகை அளிக்கப்படுகிறது. நோயுற்ற தொழிலாளி மருத்துவரின்
பரிந்துரையின் பேரில் அவரது நோய்க்காலம் 15 நாட்கள் இடைவெளிக்கு மிகாமல்
இருக்கும் பட்சத்தில் காத்திருப்பு நாட்கள் இல்லாமல் அவருக்கு நோய்க்கால
உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நோய்க்கால உதவித்தொகை பெற்றுக்கொள்ளும் காலங்களில் தொழிலாளி
சம்பளத்திற்காக வேலைக்குச் செல்லவும் கூடாது, சம்பளத்துடன் கூடிய
விடுப்பிலும் இருக்கக்கூடாது.

2. நீட்டிக்கப்பட்ட நோய்க்கால உதவிப் பயன்கள்

நீட்டிக்கப்பட்ட நோய்க்கால உதவிப்பயன்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள
பதினோரு பிரிவுகளில் உள்ளடங்கிய 35 நோய்களில் ஏதாவது ஒரு நோயால்
காப்பீடு பெற்ற நபர் பாதிப்புக்கு உள்ளாகும் பட்சத்தில் அவருக்கு இ.எஸ்.ஐ.
கார்ப்பரேஷனால் வழங்கப்படக்கூடிய உதவித்தொகையாகும்.

நீண்ட கால நோய்கள்

1. காசநோய்
2. தொழுநோய்
3. நுரையீரல் பாதிப்பு
4. நாள்பட்ட சளி சம்பந்தப்பட்ட நோய்கள்
5. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள்
6. எய்ட்ஸ்

மிமி. புற்றுநோய்

7. புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோய்கள்

மிமிமி. சிறுநீரக கோளாறுகள்

8. சர்க்கரை நோய், கண், சிறுநீரகங்கள் பாதிப்படைதல்

மிக்ஷி. நரம்பு மண்டல பாதிப்புகள்

9. ஒரு கை, ஒரு கால் செயலிழப்பு
10. பக்க வாதம்
11. இரண்டு கால்களும் பாதிப்படைதல்
12. உறுப்புகள் செயல் இழத்தல்
13. மூளையில் கட்டி
14. தண்டு வடம் பாதிப்படைதல்
15. மூளை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்
16. உடற் பருமன் நோய்

க்ஷி. கண் நோய்கள்
17. கண் நோய்
18. கண் விழி நோய்
19. கண் அழுத்த நோய்

க்ஷிமி. இருதய நோய்கள்

20. இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை
21. வலது இடது இருதய வால்வுகள் செயல் இழத்தல்
22. இருதய வால்வு சிகிச்சை
23. இருதய கோளாறு
24. இருதய அறுவை சிகிச்சை

க்ஷிமிமி. மார்பு நோய்கள்

25. நுரையீரல் பாதிப்பு
26. இருதய கோளாறு

க்ஷிமிமிமி. ஜீரண உறுப்புகள் பாதிப்பு

27. கல்லீரல் பாதிப்பு மற்றும் நாள்பட்ட மஞ்சள்
காமாலை நோய்

மிஙீ. எழும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்

28. தண்டு வடம் தேய்மானம்
29. எலும்பு நோய்
30. கால் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
31. பல இடங்களில் எலும்பு முறிவு

ஙீ. மன நோய்கள்

32. மூளை பாதித்தல் (மன அழுத்தம்)

ஙீமி. மற்ற நோய்கள்

33. தீக்காயம் 20 % மேல் பாதித்தல்
34. சிறுநீரகம் பழுதடைதல்
35. இரத்த குழாய் நோய்

நீட்டிக்கப்பட்ட நோய்க்கால உதவி பெற காப்பீடு பெற்ற தொழிலாளி
தொடர்ந்து 2 ஆண்டுகள் பணி செய்திருத்தல் வேண்டும். தொடர்ச்சியான 4
பங்களிப்பு காலங்களில், குறைந்த பட்சம் 156 நாட்களுக்கு தனது பங்களிப்பை
செலுத்தியிருந்து இவற்றுள் ஏதாவது ஒரு பங்களிப்பு காலத்தில் நோய்க்கால
உதவித்தொகை பெறும் அளவுக்கு (78 நாட்களுக்கு) சந்தாத்தொகை செலுத்தப்
பெற்றுள்ளவராகவும் இருக்க வேண்டும்.

நோய்க்கால உதவித்தொகை வழங்கப்படும் அதிகபட்சமான 91 நாட்கள்
முடிவடைந்த பிறகு நீட்டிக்கப்பட்ட நோய்க்கால உதவித்தொகைப் பயன்கள் அதன்
பின் தொடர்ச்சியாக 124 நாட்கள் வரையிலும், பின்னர் தகுந்த மருத்துவ
பரிசோதனை மற்றும் பரிந்துரையின் பேரிலும் தொடர்ந்து அதிகபட்சமாக 309
நாட்களுக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் நோயின் தீவிரத் தன்மை மற்றும்
தொடர்ந்த மருத்துவ சிகிச்சை போன்றவைகளின் அடிப்படையில் தகுந்த
மருத்துவக்குழு பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவரின் பரிந்துரைகளின் பேரில்
மேலும் 330 நாட்கள் (அ) 60 வயது (எ து குறைவோ அது வரை) நீட்டிக்கப்பட்டு
வழங்கப்படுகிறது. எனவே, இந்நிலையில் காப்பீட்டு நபர் அதிகபட்சமாக 730
நாட்கள் (நோய்க்கால உதவித்தொகை காலம் 91 நாட்கள் உட்பட) உதவித்தொகை
பெறும் வசதியும் குறிப்பிட்ட மூன்று வருட கால மருத்துவ உதவிச்சேவைகளையும்
பெறும் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீட்டிக்கப்பட்ட நோய்க்கால உதவித்தொகை காப்பீட்டு நபரின்
நோய்க்கால உதவித்தொகையின் அளவில் நூற்று நாற்பது சதவீத அளவுக்கான
உதவித்தொகை அதிகரிக்கப்பட்டு, அதிகபட்சமான 639 நாட்களுக்கு உதவித்தொகை
வழங்கப்படும். உதாரணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 125/ – நோய்க்கால
உதவித்தொகையாக பெறும் தொழிலாளி நீட்டிக்கப்பட்ட நோய்க்கால
உதவித்தொகையாக ரூபாய் 175/ – (அதாவது ரூபாய் 50 அதிகமாக) பெறும் வசதி
வழங்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நோய்க்காலம் தற்பொழுது மூன்று வருடம் என
நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இந்தக் காலம் முடியும் வரை பாதிப்புக்குள்ளான
தொழிலாளி சந்தா ஏதும் செலுத்தாமலிருக்கும் நிலையிலும் கூட காப்பீடு பெற்ற
தொழிலாளி என்ற நிலையில் தொடர்ந்து திட்டப்பலன்களை பெறும் தகுதி
பெற்றுள்ளவராகவே இருப்பார்.

மருத்துவ பராமரிப்பு வசதிகள் தொழிலாளிக்கும் அவரது குடும்பத்தாருக்கும்
மூன்று வருடம் வரை வழங்கப்படும் இந்த கால கட்டத்திற்குள் தொழிலாளி
இறந்தால் ஈமச்சடங்கு நிதி உதவியாக ரூ.2500/ -ம் வழங்கப்படும்.

3. (குடும்பக் கட்டுப்பாட்டிற்கான) அதிகரிக்கப்பட்ட நோய்க்கால உதவி
பயன்கள்

இந்திய அரசின் சிறு குடும்ப மேம்பாட்டுக் கொள்கையினை செயல்படுத்தும்
வகையில் இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷ ன் தனது திட்டங்களுள் ஒன்றாக
குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிசிச்சை மேற்கொள்ளும் காப்பீடு பெற்ற
தொழிலாளர்கள் வாஸக்டமி (ஆண்களுக்கு), டியூபக்டமி (பெண்களுக்கு),
அதிகரிக்கப்பட்ட நோய்க்கால உதவித்தொகை வழங்கி வருகிறது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு உரிய பங்களிப்புத்தொகை நிபந்தனைகள்
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சாதாரண நோய்க்கால உதவித்தொகை
பயன்களுக்கான நிபந்தனைகளேயாகும்.

இதற்கான உதவித்தொகை சாதாரண நோய்க்கால உதவித்தொகையின்
விகிதத்தின் இருமடங்காக கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.

ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு 7 நாட்களுக்கும்
பெண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு 14 நாட்களுக்கும்
இந்த உதவித்தொகை கிடைக்கின்றது. மேலும் அறுவை சிகிச்சை செய்து
கொண்டதன் காரணமாக ஏதேனும் தொடர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால்
மேற்காμம் காலவரையறை ஒரு முறை நீட்டிக்கப்பட்டு அதிகபட்சமாக 7
நாட்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவியின் காலம் சாதாரண
நோய்க்கால உதவி நாட்களுடன் கணக்கிடப்படுவதில்லை.

4. பணி விபத்தினால் ஏற்படும் உடல் இயலாமைக்கான உதவித்தொகை
வழங்குதல்

தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும்
போது பணி நிமித்தமாக அல்லது பணியின் காரணமாக தொழிலாளர்களுக்கு
ஏதேனும் விபத்துக்கள் நேரிடும் பொழுது பணியாற்ற இயலாத நிலை நேரிடுகிறது.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் பணியாற்ற இயலாமல் ஊதியம் பெற இயலாத
நிலையில் இருக்கும் காப்பீடு பெற்ற சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய
நிபந்தனைகளுடன் காப்பீட்டுத்தொகை வழங்கும் ஒரு உன்னதமான திட்டமாகும்.
அவ்வாறு ஏற்படும் விபத்துகளுக்கு தொழிலகங்கள் மற்றும் நிறுவனங்கள் எந்த ஒரு
உதவித்தொகையும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய
நிர்பந்தம் ஏதும் கிடையாது.

கீழ்க்கண்ட நிலைகளில் இந்த உதவித்தொகை தொழிலாளர்களுக்கு வழங்க
உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

(1) தற்காலிக இயலாமை

விபத்து மற்றும் விபத்தின் தன்மைகளுக்கேற்ப காப்பீடு பெற்ற
தொழிலாளி, தற்காலிகமாக வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியதின்
காரணமாக மருத்துவ சிகிச்சை மற்றும் முழு ஓய்வும் தேவைப்படுகிறது. இந்த
இயலாமை தற்காலிகமானதாகவே இருக்கும். ஆரம்ப கட்ட மருத்துவ சிகிச்சை
மற்றும் முழு அளவிலான சிகிச்சை வசதிகள் அவருக்கு கொடுப்பதற்காக
(காலவரையின்றி) அவரது இயலாமை முழுமையாக சரியாகும் வரை மருத்துவ
விடுப்பு உதவித்தொகை அதற்கான மருத்துவ சிகிச்சை ஆகிய இவ்விரண்டு
சேவைகளையும் வழங்க வழிவகுக்கப்பட்டுள்ளது.

(2) நிரந்தர ஊனம்

பணி விபத்தின் காரணமாக காப்பீட்டுத் தொழிலாளர்களுக்கு
பாதிக்கப்பட்ட உடல் அங்கத்தில் ஒரளவு அல்லது முழு ஊனம் ஏற்படுகையில்
மீண்டும் அவர் தனது பணிக்கு திரும்ப ஈடுபடுகையில் அவருக்கு ஏற்பட்ட
ஊனத்தினால் வேலைத்திறன் இழப்பு ஏற்படும் நிலையில் அவருக்கு ஊதியத்திறன்
இழப்பு தவிர்க்க முடியாததாகிறது. இந்த நிரந்தர ஊனத்தினால் அவர்களுக்கு
ஏற்படும் ஊதியத்திறன் இழப்பு மருத்துவ ரீதியாக கணக்கிடப்பட்டு பணியில்
தொடர்ந்து இருந்தாலும் அல்லது வேறு பணிக்கு செல்ல நேர்ந்தாலும் அல்லது
பணி செய்யவே இயலாத நிலை ஏற்பட்டு இருந்தாலும் அவரின் ஊதியத்திறன்
இழப்பை ஈடு செய்வதற்காக அவருக்கு ஆயுள் முழுவதும் மாதாந்திர
அடிப்படையில் (ஓய்வூதியம் போன்ற) உதவித்தொகை வழங்க இ.எஸ்.ஐ.
திட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெறும் கால
கட்டத்தில் தொழிலாளி மரணமடைந்தால் அவரது குடும்பத்தில் மூத்த நபருக்கு
அல்லது அந்த செலவு செய்தவருக்கு இறுதிச்சடங்கு நிதி உதவியாக ரூ.2500/-
வழங்கப்படும்.

இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிலகங்களில் வேலைக்குச்
சேர்ந்த நாள் முதலே தொழிலாளர்கள் காப்புறுதி பெற்ற நபர்கள் ஆகிறார்கள்.
ஆகையால் இந்த இயலாமைக்கான பயன்கள் அடைவதற்கு அவர்கள் முழு தகுதி
பெற்றவர்களாகிறார்கள்.

விபத்து நேரிடுகையில் காப்பீடு பெற்ற தொழிலாளர்கள் மதுபானம்
அல்லது போதை மருந்துகள் போன்றவற்றை உட்கொண்டிருந்திருப்பாரே
யென்றால் வேலை செய்யும் பொழுது ஏற்படும் இத்தகைய விபத்துகளுக்கு,
இந்தத்திட்டத்தின் கீழ் உள்ள பயன்கள் ஏதும் கிட்டாது.

தொழில் சார்ந்த நோய்களின் காரணமாக ஏற்படும் உடல் இயலாமை

தொழிலகங்களில் ஏற்படும் இரசாயன கழிவுகள் செய்யும் வேலைகளின்
காரணமாக மற்றும் அதன் தொடர்பான தொழில் சார் நோயின் மூல காரணம்
அவர் செய்யும் வேலையில் தொடர்புடையதாகும். இந்த நோய்கள் தொழிலாளர்
அரசு காப்பீட்டு சட்டம், அட்டவணை 3-ன் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவை
வேலை சம்பந்தப்பட்ட நோய் என தெரிவு செய்யப்பட்டுள்ளன. எந்த விதமான
தொழிலின் செயலாக்கத்தால் இவ்வகையான நோய் நொடிகள் ஏற்படக்
காரணமோ அவை இந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ளன. அது போன்ற
சந்தர்ப்பங்களில் மருத்துவச் சான்றுகளின் அடிப்படையில் உரிய சிறப்பு
மருத்துவரின் பரிந்துரைகளை அடிப்படை ஆதாரமாகக்கொண்டு தொழில் சார்ந்த
நோய்கள் உறுதி செய்யப்படுமாயின் அவை ‘வேலையினால் ஏற்பட்ட ஊனம்
என கொள்ளப்பட்டு ஊன உதவித்தொகை வழங்க வழி வகைகள்
செய்யப்பட்டுள்ளன.

தற்காலிக உடல் ஊனத்திற்கான உதவித்தொகை அந்த தற்காலிக உடல்
ஊன காலத்திற்கான இயலாமை சான்றிதழை தங்களுக்குரிய இ.எஸ்.ஐ. மருந்தக
மருத்துவரிடம் பெற்று அச்சான்றிதழை சமர்ப்பிக்கும் பட்சத்தில், அம்மருத்துவச்
சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள இயலாமைக் கால அளவிற்கு வழங்கப்படுகிறது.
அவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ் விபத்து ஏற்பட்ட நாள் தவிர்த்து குறைந்த
பட்சம் மூன்று நாட்களுக்கு பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் தற்காலிக ஊன உதவி
கிடைக்க ஆவண செய்யப்பட்டுள்ளது.

தொழில் சார்ந்த நோயின் காரணமாக நிரந்தர ஊனம் ஏற்படும் பட்சத்தில்
தக்க மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் பேரில் ஊனத்தினால் ஏற்பட்டுள்ள
ஊதியத்திறன் இழப்பிற்கு ஈடுசெய்யும் விதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள
அட்டவணையின் படி மாதாந்திர பென்ஷனாக நிரந்தர ஊன உதவித்தொகை
காப்பீடு பெற்ற தொழிலாளியின் ஆயுட்காலம் வரை வழங்கப்படுகிறது. மற்றும்
இவ்வாறு ஏற்பட்ட ஊனத்தினால் ஒரு தொழிலாளி தொடர்ந்து பணிக்குச்
சென்றாலும், செல்லா விட்டாலும் அல்லது வேறு மாற்றுப்பணிக்கு சென்று
விட்டாலும் இந்த மாதாந்திர பென்ஷன் உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
அவரின் ஆயுட்காலம் வரை (வயது வரம்பின்றி) வழங்கப்படும். இந்த
உதவித்தொகை பெறும் கால கட்டத்தில் தொழிலாளி மரணமடைந்தால் அவரது
குடும்பத்தில் மூத்த நபருக்கு அல்லது அந்த செலவு செய்தவருக்கு இறுதிச்சடங்கு
நிதி உதவியாக ரூ.2500/- வழங்கப்படும்.

பொதுவாக தற்காலிக உடல் ஊனத்துக்கான தினசரி உதவித்தொகை,
சாதாரண நோய்க்கால உதவித்தொகையின் 140 சதவிகித அளவுக்கு
கணக்கிடப்பட்டு தொழிலாளி மீண்டும் பணிக்கு செல்லும் தகுதி பெறும் வரை
மருத்துவ விடுப்பிலுள்ள நாட்களுக்கு எவ்வித காலவரையறையின்றி
வழங்கப்படுகிறது.

ஊதியத்திறன் இழப்பிற்கான மதிப்பீடு, அதிகாரம் பெற்ற
மருத்துவக் குழுவினரால் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட
மதிப்பீட்டின் விளைவாக, உதவித்தொகை குறித்து சம்பந்தப்பட்ட காப்பீட்டுத்
தொழிலாளி தனக்கு பாதகம் என அதிருப்தி அடைந்தால், தகுந்த நிவாரணம்
பெற்றுக்கொள்ள ஏதுவாக மருத்துவ மேல் முறையீட்டு மன்றத்தில் (மெடிக்கல்
அப்பீல் டிரியூபினலில்) எழுத்துப் பூர்வமாக உரிய படிவத்தில் குறிப்பிட்ட
காலத்திற்குள் மேல் முறையீட்டு மனு (அப்பீல்) தாக்கல் செய்யலாம். அல்லது
தொழிலாளர் ஈட்டுறுதி நீதிமன்றத்திலும் மேல் முறையீட்டு மனு தாக்கல்
செய்யலாம். மேல்முறையீட்டு மனுவிற்கான தீர்ப்பு வழங்கப்படும் வரை, நடப்பில்
இருக்கும் நிரந்தர ஊன உதவித்தொகையே அத்தொழிலாளிக்கு வழங்கப்படும்.

நிரந்தர ஊன உதவித்தொகையை ஒட்டு மொத்தமாக பெற்றுக்கொள்ளும் வசதி

காப்பீடு பெற்ற தொழிலாளி நிரந்தர ஊனத்துக்கான மாத
உதவித்தொகையை தாம் விரும்பினால், கீழ்க்காμம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு
மாதாந்திர உதவித்தொகை அடிப்படையிலிருந்து விலக்கு பெற்று, ஒட்டு மொத்த
உதவித்தொகையாக ஒரே தவணையில் பெற்றுக்கொள்ளும் வசதி
வழங்கப்பட்டுள்ளது.

(1) நிரந்தர ஊன உதவித்தொகை நிர்ணய கணக்கீடு முழு முடிவு
செய்யப்பட்டிருக்க வேண்டும்.

(2) நிரந்தர ஊன உதவித்தொகை நாள் ஒன்றுக்கு ரூ.5/-க்கு மிகாமலும்,
ஒட்டு மொத்த உதவித்தொகையின் அளவீடு ரூ.30,000/-க்கு மிகாமலும்
வரையில் இருக்கும் என்றால் இந்த உதவித்தொகையை ஒரே
தவணையில் பெற்றுக்கொள்ளலாம். இதன்பிறகு அத்தொழிலாளிக்கு
மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.

5. சார்ந்தோருக்கான உதவித்தொகை

காப்பீடு பெற்ற நபர் அவர் தம் தொழில் விபத்தின் நிமித்தம் இறந்துவிட்ட
நிலையிலோ அல்லது செய்யும் வேலையால் ஏற்பட்ட நோயினால் இறந்த
நிலையில் அவரது குடும்பத்தினர் சார்ந்தே £ருக்கான உதவித்தொகை பயன்களை
இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷனில் பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.

கணவனை இழந்த மனைவி (விதவை) மறுமணம் செய்யவில்லை என்றால்
தங்கள் வாழ்நாள் முழுமைக்கும், மறுமணம் செய்து கொண்டால் மறுமணம்
செய்து கொள்ளும் வரை. அவர்களுக்கு காப்பீடு பெற்ற நபரின் இயலாமை
நோய்க்கால உதவித்தொகையின் அளவில் ஐந்தில் மூன்று பாகமும், ஒருவருக்கும்
மேற்பட்ட விதவைகள் இருக்கும் பட்சத்தில் அதுவே அவர்களுக்குள் சரி சமமாக
பகிர்ந்தளிக்கப்படுகிறது.

முழுமையாக காப்பீடு செ ய்த நபரின் வருமானத்தில் மட்டுமே வாழும்
சட்டப்பூர்வமான அல்லது தத்தெடுத்துக்கொண்ட திருமணமாகாத மகன் 18
வயதை எட்டும் வரையிலும், சட்டபூர்வமான மகன் ஊனமுற்றவராக இருந்தால்
அவர் ஊனம் சரியாகும் வரையிலும், அவர்களுக்கு காப்பீடு பெற்ற நபரின்
இயலாமை நோய்க்கால உதவித்தொகையின் அளவில் ஐந்தில் இரண்டு பாகம்
என்கிற அளவில் உதவித்தொகை பயன்கள் அளிக்கப்படுகிறது.

சட்டப்பூர்வமான அல்லது தத்தெடுத்துக்கொண்ட திருமணமாகாத மகள் 18
வயதை அடையும் வரை அல்லது திருமணம் செய்து கொள்ளும் வரை இதில் எது
முதலிலோ அது காலம் வரையிலும், மகள் ஊனமுற்றவராக இருந்து அவர்
திருமணமே ஆகாமல் இருந்தால், ஊனம் சரியாகும் வரையிலும், அவர்களுக்கு
காப்பீடு பெற்ற நபரின் இயலாமை நோய்க்கால உதவித்தொகையின் அளவில்
ஐந்தில் இரண்டு பாகம் என்கிற அளவில் உதவித்தொகை பயன்கள்
அளிக்கப்படுகிறது.

முழுமையாக காப்பீடு செய்த நபரின் வருமானத்தில் மட்டுமே வாழும்
விதவைத் தாயாருக்கு அவரது ஆயுட்காலம் முழுமைக்கும் காப்பீடு பெற்ற நபரின்
இயலாமை நோய்க்கால உதவித்தொகையின் அளவில் ஐந்தில் இரண்டு பாகம்
என்கிற அளவில் ரொக்க உதவித்தொகை பயன்கள் அளிக்கப்படுகிறது.

விதவையோ அல்லது சட்டப்பூர்வமான குழந்தை எதும் இல்லையென்றால்,
இத்திட்டத்தின் பயன்கள் பெற்றோரில் ஒருவருக்கோ அல்லது தாத்தா, பாட்டி
இருவரின் வாழ்நாள் முழுவதற்கும் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்
மகன் 18 வயதை எட்டும் வரையில் அல்லது அவர் குடும்பத்தைச் சார்ந்த திருமணம்
ஆகாத மகள் 18 வயதை அடையும் வரை அல்லது விதவைப் பெண்μக்கோ
அவள் 18 வயதை அடையும் வரை கிடைக்கும். மனநலம் குன்றிய குழந்தைகள்
நலம் பெறும் வரையிலும் சார்ந்தோருக்கான ரொக்க உதவித்தொகை
வழங்கப்படுகிறது. இவ்வாறு பகிர்ந்தளிக்கக்கூடிய சார்ந்தோருக்கான
உதவித்தொகையின் மொத்த பயனளவு இறந்துபட்ட காப்பீடு பெற்ற நபருக்கு
கிடைத்தற்குரிய தற்காலிக இயலாமை நோய்க்காலத்திற்கான உதவித்தொகைக்கு
சரிசமமானதாக இருக்கும். இது தோராயமாக காப்பீடு பெற்றிருந்த நபரின்
தினசரி ஊதிய விகிதத்தில் 70 சதவீதமாகும்.
இவ்வாறு பகிர்ந்தளிக்கக்கூடிய சார்ந்தோருக்கான உதவித்தொகையின்
மொத்த பயனளவு முழு அளவைவிட அதிகமானால் அதற்கேற்ப பயனாளிகளின்
பங்கு விகிதம் மேற்கண்ட விகிதாச்சார அடிப்படையின் கீழ் சரி செய்து
வழங்கப்படும்.
இறந்து போன காப்பீடு பெற்றிருந்த நபரின் குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் சார்ந்தோருக்கான உதவித்தொகை பயன்களை பெற அவர்களது
உறவுமுறை உரிமையை உறுதி செய்ய கீழ்க்கண்ட தஸ்தாவேஜ்களை கிளை
அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

(அ) செய்த வேலையின் நிமித்தம் ஏற்பட்ட மரணம் சம்பவித்ததற்கான சான்றிதழ்.

(ஆ) இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷனால் நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்ப படிவம்.

(இ) காப்பீடு பெற்றிருந்த இறந்துபோன நபரின் எந்தவகை உறவினர் என்பதற்கான
சான்றிதழ்.
(ஈ) சார்ந்தோருக்கான உதவித்தொகை கோருபவரின் வயது பற்றிய
அதிகாரப்பூர்வமான சான்றிதழ்.

(உ) ஊனத்தைப் (மிஸீயீவீக்ஷீனீவீtஹ் ) பற்றிய மருத்துவர் கொடுக்கும் சான்றிதழ் அல்லது
சட்டப்பூர்வமான மகன் உடல் ஊனமுற்றிருந்தால் அல்லது சட்டப்பூர்வமான
அல்லது தத்தெடுத்த திருமணமாகாத ஊனமுற்ற மகளுக்காக வேறு ஏதாவது
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் சான்றிதழ்.

சார்ந்தோருக்கான உதவித்தொகை பெறும் நபர் உயிருடன் இருக்கிறார்
என்பதற்கான சான்றாவனம் குறிப்பிட்ட ஆறு மாத கால இடைவெளியில் மற்றும்
மணம், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான அறிக்கையும், இ.எஸ்.ஐ.
கார்ப்பரேஷனால் குறிப்பிட்ட வயதை எட்டிவிட்டது குறித்த சான்றிதழ்,
ஊனத்தின் தன்மை முடிவடையவில்லை என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட
சான்றாவனமும் கிளை அலுவலகத்தில் அவற்றின் நிரூபனம் தேவைப்படும்
பட்சத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முறையான உண்மைகளை சரியாக அறிவிக்க இயலாமல் போனதாலும்
தகுதியான சான்றாவனங்களை முறையாக சேர்க்க இயலாமல் புதிய சான்றுகள்
சமர்ப்பிக்கப்படும் போதும் அவை தகுந்த பரிசீலனையின் பேரில்
ஏற்றுக்கொள்ளப்படும் போது இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் ஏற்கனவே எடுத்த
முடிவை மறு பரிசீலனை செய்து சார்ந்தோருக்கான உதவித்தொகை பயன்கள்
தொடரவோ, குறைக்கவோ, அதிகரிக்கவோ, ரத்து செய்யவோ இயலும்.
இந்த உதவித்தொகை மாதாமாதம் பென்சனைப் போன்று இஎஸ்.ஐ.
கார்ப்பரேஷனின் சம்பந்தப்பட்ட கிளை அலுவலகத்தின் வாயிலாக
வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரிலே அல்லது மணிஆர்டர்
மூலமாகவோ கார்ப்பரேஷன் செலவில் பெற்றுக்கொள்ளலாம். ஆயினும் ஆறு
மாதத்திற்கு ஒருமுறை பயனாளிகள் கிளை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக
வேண்டும்.

6. மகப்பேறு உதவிகள்

மகப்பேறு உதவிகள் என்பது காப்பீடு பெற்றுள்ள பெண்
தொழிலாளர்களுக்கு அவர்கள் கர்ப்பம் தரித்திருக்கும்போது, கருச்சிதைவு அல்லது
கர்ப்பத்தால் ஏற்படும் சுகவீனத்திற்கு, பிரசவம், குழந்தை முன்கூட்டியே பிறப்பது
போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வேலையில் இருந்து விடுப்பு
பெறுவதற்காக வழங்கப்படும் பயன்களாகும். பிரசவம் என்பது 26 வார கால
கர்ப்பத்துக்குப் பிறகு குழந்தை பிறப்பது என்று அர்த்தமாகும். கருச்சிதைவு
என்றால் கர்ப்பிணியின் கருப்பையில் இருக்கும் கரு சிதைந்து போவது என்று
அர்த்தமாகும். இது கர்ப்பகாலத்திற்குள் ( 26 வாரம் வரை ) ஏற்படக்கூடியதாகும்.
கிரிமினல் கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு ஏற்பட்டால் அதற்காக பயன்
எதுவும் கிடைக்காது.

இந்த பயன்கள் கீழ்க்கண்ட விதத்தில் வழங்கப்படும்.

(அ) பிரசவத்துக்கு

குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கும் தேதிக்கு 6 வாரங்கள்
முன்பாகவோ அல்லது குழந்தை பிறந்த பிறகு மொத்தமாக 12 வாரங்களுக்கு
மிகாமல் இந்த பயன் கிடைக்கும். ஒரு வேளை காப்பீடு பெற்ற நபர் பிரசவத்தின்
போது அல்லது அதற்குப்பிறகு 6 வார காலத்துக்குள் இறந்து விட்டால் குழந்தை
உயிருடன் இருந்தால் இந்த பயன் முழு காலகட்டத்துக்கும் (12 வாரம்)
வழங்கப்படும். ஆனால் குழந்தையும் அந்த காலத்துக்குள் இறந்து விட்டால்
அதாவது அந்த குழந்தை இறந்த நாள் வரை பயன் கிடைக்கும்.

குறிப்பிடப்பட்ட பிரசவ நாளுக்கு 42 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது
அதன் பின்னரோ, அல்லது பிரசவம் முடிந்து பணிக்குத் திரும்புவதற்கு முன்போ,
அல்லது அதற்கு பின்னரோ, உரிய மருத்துவச் சான்றுகள் மற்றும் நிறுவன
உரிமையாளர் சான்றுகள் பெற்று உரிய கோரிக்கை மனுவுடன் சமர்ப்பித்து
இவ்வுதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

(ஆ) கருச்சிதைவு

கருச்சிதைவு ஏற்பட்ட தினத்தை அடுத்துள்ள 6 வாரங்களுக்கு பயன்
கிடைக்கும்.

(இ) கர்ப்பம், பிரசவம், குழந்தை முன்கூட்டியே பிறப்பது போன்ற காரணங்களால்
மேலே குறிப்பிட்டிருக்கும் 12 வார கா லத்திற்கு பின்னும் (நோய்கள் அல்லது
கருச்சிதைவு ஏற்பட்டதால் உண்டாகும் நோய் ஆகியவற்றிற்கு கூடுதலாக 1 மாத
காலத்திற்கு பயன் கிடைக்கும். எல்லா சந்தர்ப்பங்களிலும் காப்பீடு பெற்ற பெண்
காப்பீட்டு நபர் வேறெந்த சலுகைக்காகவும் அந்த கால கட்டத்தில் தனது
தொழிலகத்தில் வேலை செய்யாதபோது மட்டுமே கிடைக்கும்.

பேறுகால உதவி

பெண் காப்பீட்டு நபர்கள் தாய்மையடையும் பட்சத்தில் பணிக்குச்செல்ல
இயலாத நிலை ஏற்படுகிறது. சுமார் மூன்று மாத காலமாவது அவர்களுக்கு முழு
ஓய்வு தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு பேறுகால உதவித்தொகை
அதிகபட்சமாக 84 நாட்களுக்கு பெண் காப்பீட்டு நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏறக்குறைய முழுச் சம்பளம் அவர்களுக்கு ஈடு கட்டப்படுகிறது.

மற்றும் கருச்சிதைவின் காரணமாக பணியாற்ற முடியாத காலத்தில்
பெண் காப்பீட்டு நபர்கள் உரிய மருத்துவச் சான்று பெற்று 42 நாட்கள் வரை
குறைபிரசவத்திற்கான உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். இது பேறுகால
உதவித்தொகையை ஒத்திருக்கும்.

இந்த உதவித்தொகையை வாரந்திரமாகவோ, (7-நாட்களின் மடங்கு)
அல்லது ஒட்டு மொத்தமாக காசோலையாக 84 நாட்களுக்குப்பின்னும்
பெற்றுக்கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட சாதாரண நோய்க்கால உதவித்
தொகையைப் போல் இரு மடங்கு கணக்கிடப்பட்டு அதிகபட்சமாக 84 நாட்கள்
வரை வழங்கப்படுகிறது. முன்பணம் வழங்கப்பட மாட்டாது.

தகுதிகள்

எதிர்பார்ப்பு பிரசவ நாள் அல்லது பிரசவ நாள் ஆகிய ஏதோ ஒன்றில்,
காப்பீட்டு நபரின் மகப்பேறு உதவித்தொகை கோரிக்கையின் அடிப்படையில்,
பயனீட்டு காலத்தின் முந்தைய, அடுத்தடுத்து இருக்கும் இரண்டு சந்தாக்
காலங்களில் செலுத்தப்பட்ட சந்தா த்தொகை நாட்களுக்கு கணக்கிடப்
படவேண்டும். மேலும் இவ்விரு சந்தாக் காலத்திற்குள்ளும் அவர் சந்தா தொகை
செலுத்தப்பட்டவராக இருக்க வேண்டும் மற்றும் இவ்விரு சந்தாக் காலத்திலும்
சேர்ந்து குறைந்த பட்சம் 70 நாட்கள் சந்தாத் தொகை செலுத்தியிருக்க வேண்டும்.

பிரசவத்திற்கான மருத்துவ செலவீட்டுத்தொகை

இ.எஸ்.ஐ. திட்ட மருத்துவமனைகளில் பிரசவிக்கும் வசதிகள் இல்லாத
ஊர்களிலும் திட்ட அமலாக்கம் இல்லாத ஊர்களிலும் பெண் காப்பீட்டு நபர் ,
காப்பீட்டு நபரின் மனைவி பிரசவிக்க நேரிடுகையில் அவர்களுக்கு ஏற்படும்
செலவுத்தொகையை ஈடு செய்வதற்காக அதிகபட்சம் ரூ.1000/- வழங்க இத்திட்டம்
வழிவகுக்கப்பட்டுள்ளது.

7. மருத்துவ பயன்கள்

இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் பணியில் சேரும் நாள் முதலே காப்பீடு பெற்ற
நபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவ பராமரிப்பை பெறும் தகுதி
கிடைத்து விடுகிறது. இந்த மருத்துவ பராமரிப்பில் நோயின்ஆரம்ப தன்மை பற்றி
அறியும் சேவைகள், சிறப்பு மருத்துவரின் பரிசோதனைகள் மற்றும்
உள்நோயாளிகளுக்கான மருத்துவ பராமரிப்புகள் ஆகியவை உள்ளடங்கும். நோய்
காலங்களில் உரிய சிகிச்சை வசதிகள் பெற்று கொள்ள ஏதுவாக வெளி
நோயாளியாகவோ அல்லது தேவைப்படின் மருத்துவமனையில் உள்
நோயாளியாகவோ அனுமதிக்கப்பட்டு முழுத் தரம் மிகுந்த மருத்துவச்
சேவையினை வழங்கும் நோக்கத்திற்காக பன்முகமாகப் பயன் நிறைந்த ஒரு உன்னத
திட்டப்பயன் ஆகும். நோயாளி பயணம் செய்யமுடியாத நிலை ஏற்படும்போது
ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்கப்படுகின்றன. காப்பீடு பெற்ற நபர் அல்லது
அவரது குடும்பத்தினர்கள் இதற்காக எந்த தொகையையும் செலுத்த
வேண்டியதில்லை.

இத்திட்டத்தின் கீழ் முதன் முறையாக காப்பீடு பெறும் தொழிலாளி மற்றும்
குடும்பத்தினர் மூன்று மாத காலத்துக்கு மருத்துவ பராமரிப்பை
பெற்றுக்கொள்ளும் தகுதி பெறுகிறார். அவர் காப்புறுதி பெறக்கூடிய பணியில்
தொடர்ந்து 3 மாதங்கள் அல்லது அதற்கும் கூடுதலான காலத்துக்கு வேலை
செய்தால் அப்போது அவருக்கு முதல் பயனளிக்கும் காலம் வரை மருத்துவ
பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. பங்களிக்கும் காலகட்டத்தில் அவர்
குறைந்த பட்சம் 78 நாட்களுக்கு சந்தாத்தொகை செலுத்தியிருந்தால் அடுத்த
பயனளிக்கும் காலம் வரை மருத்துவ பராமரிப்பு தொடர்ந்து அவருக்குக்
கிடைக்கிறது.

மருத்துவ பயன்களில் உள்ள சிறப்பம்சங்கள்

வழக்கமான மருத்துவ பராமரிப்பில் வெளி மற்றும்
உள்நோயாளிகளுக்கான சிகிச்சையில், எல்லா அத்தியாவசியமான மருந்துகள்,
டிரஸ்சிங்குகள், பெதாலஜிக்கல் மற்றும் ரேடியோலாஜிக்கல், ஸ்பெஷலிஸ்ட்டுகளின்
கன்ஸல்டேஷன் மற்றும் பராமரிப்பு, குழந்தை பிறப்பதற்கு முன் மற்றும் குழந்தை
பிறந்த பிறகு தரப்படும் பராமரிப்புகள், அவசர நெருக்கடி சிகிச்சைகள்
முதலியவைகள் உள்ளடங்கும்.

உள் நோயாளிகளுக்கான சேவைகள்

நாடு முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ மனைகளில் பெரும்பாலான
மருத்துவ மனைகள் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. உள் நோயாளிகள்
மற்றும் நோய் கண்டறியும் வசதிகள் போன்ற ஆரம்ப கட்ட சேவைகள் இந்த
மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு
மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார்
மருத்துவமனைகளுடன் ஒப்பந்த அடி ப்படையில் அதிதீவிர நோய்
சிகிச்சைக்காகவும், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கும் சிறப்பு வசதிகளை
செய்து வைத்துக் கொண்டுள்ளன.

வெளிநோயாளிகள் சிகிச்சை

வெளி நோயாளிகளுக்கான மருத்துவ பராமரிப்பு சேவைகள், மாநில அரசின்
கீழ் இயங்கும் தொழிலாளர் நல ஈட்டுறுதி மருந்தகங்கள் அல்லது நடமாடும்
தொழிலாளர் நல ஈட்டுறுதி மருந்தகம் ஆகியவைகளில் உள்ள மருத்துவர்களால்
பராமரிக்கப்படுகின்றன. மருத்துவ சேவைகளில் கிடைக்கும் பயன்களில் குழந்தை
பிறப்பதற்கு முன் அல்லது குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு அளிக்கப்படும்
பராமரிப்புகள், குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்துக்கான சேவைகள் மற்றும்
பொதுவான தொற்று நோய்களுக்காக போடப்படும் தடுப்பூசிகள் ஆகியவையும்
உள்ளடங்கும்.

இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் 35 வகையான நோய்களுக்கான நீட்டிப்பு கால
சிகிச்சை மற்றும் உதவித்தொகை பயன்களை பெற்றுக் கொள்ளும் தகுதியும்
காப்பீட்டு நபர் பெறுகிறார். இந்த நீண்ட கால உதவித்தொகை பெற பட்டியலில்
கூறப்பட்ட ஏதாவது ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு அவ்வாறு பாதிக்கப்பட்டது
உறுதி செய்யப்பட்ட தேதியிலிருந்து முந்தைய நான்கு தொடர் பங்கீட்டு
காலங்களில் அவர் பணிபுரிந்து காப்பீட்டைப் பெற்று இவற்றுள் ஏதாவது ஒரு
பங்கீட்டு காலத்தில் நோய்க்கால உதவித்தொகை பெறும் தகுதி பெற்றிருந்தும்,
குறைந்த பட்சம் 156 நாட்களுக்கு தம் சந்தாத் தொகையை செலுத்தியும் இருந்தால்
இந்த நீட்டிக்கப்பட்ட நோய்க்கால பயன் அவருக்கு கிடைக்கிறது.

இந்த நிபந்தனைகள் அனைத்தும் திருப்திகரமாக இருக்குமானால் மருத்துவ
பராமரிப்பு வசதிகள் காப்புறுதி பெற்ற நபர் (மற்றும் அவரது குடும்பத்தினருக்கு)
அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்குக் கிடைக்கும்.

வேலை செய்யும் போது உடல் அவயவங்களை இழந்து விடக்கூடிய
அல்லது வேறு சந்தர்ப்பங்களில் அது போன்ற ஆபத்துக்கு உள்ளாகி விட்ட
காப்பீட்டு நபர்களுக்கு இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் தனது சொந்த செலவிலேயே
செயற்கை உறுப்புகளை வழங்குகிறது. அவற்றில் (பல் ஸெட்டுகள்,
கண்கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகள் ஆகியவையும் அடங்கும்).
(வேலையால் பற்களை இழந்து விடுவது, பார்வைக் கோளாறு அல்லது காது
கேளாமை) போன்ற பாதிப்புகளுக்கும் வழங்கப்படுகின்றன.

நோய் தடுப்பு சுகாதார பராமரிப்பு

இ.எஸ்.ஐ. திட்டம், நோய் தடுக்கும் சுகாதார பராமரிப்பு சேவையை தனது
மருந்தகங்கள் மற்றும் மருத்துவ மனைகளின் மூலம் வழங்கி வருகிறது. இவற்றில்
உயிர் கொல்லி நோய்களுக்கான தடுப்பூசிகள், பல்ஸ் போலியோ தடுப்பூசிகள்
மற்றும் குடும்ப நல சேவைகளும் உள்ளடங்கும். இ.எஸ்.ஐ. திட்டம் தேசிய
அளவில் நடைபெறும் அனைத்து நோய் தடுக்கும் சுகாதார பராமரிப்பு
சேவைகளிலும் பங்கேற்கிறது.

8. ஈமச் சடங்கு செலவுகளுக்கான உதவித்தொகை

காப்பீடு பெற்ற நபர் இறந்து விட்டால் அவரது இறுதிச் சடங்கு
செலவுகளுக்காக அளிக்கப்படும் ஒரு மொத்தத் தொகையாகும்.

காப்பீடு பெற்ற நபரின் ஈமச் சடங்குகளுக்கு செய்யப்பட்ட செலவு
தொகையை ஈடுகட்டும் விதமாக ரூ.2,500/-க்கு மிகாமல் ரொக்கமாக வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை பெறுவதற்கான ஒரே நிபந்தனை மரணமடைந்த
காப்பீட்டு நபர் அவர் மரணம் அடைந்த போது இ.எஸ்.ஐ. திட்டத்தின்படி
ஏதாவது ஒரு பயன் பெறும் தகுதி உள்ளவராக இருந்திருக்க வேண்டும். (மருத்துவ
உதவி உட்பட)

இந்த உதவித்தொகை, மரணமடைந்த கா ப்பீடு பெற்ற நபரின் குடும்பத்தைச்
சேர்ந்தவர்க்கோ அல்லது ஏனைய நபர்களுக்கோ யார் ஒருவர் ஈமச்சடங்கு
செலவினை செய்திருந்து அச்செலவு தொகைக்கான உதவித்தொகை கோரிக்கை
சமர்ப்பிக்கின்றாரோ அவருக்கு உண்மை நிலையின் அடிப்படையில் இந்த செலவு
ஈட்டுத்தொகை ஒரே தவணையில் வழங்கப்படும்.
இந்த செலவு உதவித்தொகையினை பெற வேண்டுமானால், விண்ணப்பம்
செய்யும் நபர் தனது கோரிக்கையை தானே நேரடியாகவோ அல்லது அஞ்சல்
மூலமாகவோ மரணமடைந்த காப்பீட்டு நபர் சார்ந்திருந்த கிளை அலுவலகத்தில்
பின்வரும் ஆவணங்களுடன் இணைத்து காப்பீட்டு நபர் இறந்த நாளிலிருந்து
மூன்று மாத காலத்துக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.

1. படிவம் 22-ன்படி ஈமச்சடங்கு உதவித்தொகை கோரும் நபரின்
உறுதிமொழி மற்றும் அவ்வுறுதிமொழியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரின்
சான்றொப்பம்.

2. காப்பீட்டு நபரின் அங்கீகரிக்கப்பட்ட மரணச்சான்றிதழ்.
மறு வாழ்வு திட்டம்

நிரந்தர ஊனம் அடைந்த காப்பீட்டு நபர்களுக்கு செயற்கை உறுப்புகள்
அல்லது சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் பல் செட்டுகள் மற்றும் கண்
கண்ணாடிகள் போன்ற சாதனங்களை இ.எஸ்.ஐ.கழகம் வழங்கி வருகிறது.

தொழில் சார்ந்த புனர் வாழ்வு

இ.எஸ்.ஐ.கழகம் தன் சொந்த செலவிலேயே உடல் ஊனமுற்ற காப்பீடு
பெற்றுள்ள நபருக்கு தொழில் சார்ந்த புனர்வாழ்வுக்கான பயிற்சியை அளிக்கிறது.
ஆனால் அந்த நபரின் ஊனம் 40 சதவீகிதத்துக்கும் அதிகமாக
மதிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் பயனாளி 45 வயதுக்கும்
மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். இந்திய அரசாங்கம் நடத்தும்
தொழில்சார்ந்த புனர்வாழ்வு மையங்களி ல் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.
கட்டணம், போக்குவரத்து செலவுகள் போன்ற செலவினங்களை இ.எஸ்.ஐ.
கார்ப்பரேஷனே ஏற்றுக்கொள்ளும். புனர் வாழ்வு மையங்களில் பயிற்சியில்
இருக்கும் நாள் ஒன்றுக்கு சாதாரண நோய்க்கால உதவித்தொகையின் இரு மடங்கு
அல்லது ரூ.145/- இதில் எது குறைவோ அதன் அளவில் புனர் வாழ்வுப் படி
(உதவித்தொகை) வழங்கப்படுகிறது.

செய்யும் தொழிலால் ஏற்படும் நோய்களைக் கண்டு அறியவும், அதனைத்
தவிர்க்கவும், உரிய சிகிச்சை அளிக்கவும் புதுதில்லி, மும்பை, சென்னை மற்றும்
கொல்கத்தா போன்ற நகரங்களில் சிறப்பு மையங்களை ஏற்படுத்தி தொழிலாளர்
அரசு காப்பீட்டுக் கழகம் சிறப்புற செயலாற்றி வருகிறது.

சில பொதுவான தொழில் சார்ந்த நோய்களும் அது எந்த தொழிலின்
நிமித்தம் ஏற்படுகிறது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
—————————————————————————————————–

உயர் தர நவீன சிறப்பு சிகிச்சை

இ.எஸ்.ஐ. மருத்துவமனை, மருந்தகங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில்
காப்பீட்டாளர்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் அதி நவீன மருத்துவ வசதி ஏதேனும் அங்கு இல்லையெனில்
சம்பந்தப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவ அதிகாரியின் பரிந்துரையின் படி கோவை
துணை மண்டலத்தில் கீழ்க்கண்ட நோய்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார்
மருத்துவமனைகளில் அதிநவீன சிறப்பு மருத்துவ சிகிச்சை முற்றிலும் இலவசமாக
கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குண்டான செலவினை இ.எஸ்.ஐ.
கார்ப்பரேஷன் நேரடியாக அந்தந்த தனியார் மருத்துவமனைகளுக்கு சுழல்
நிதியிலிருந்து வழங்கி வருகின்றது.

தவிர்க்க முடியாத அவசரகாலங்களில் அங்கீகரிக்கப்பட்ட தனியார்
மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதித்து விட்டு பின் அடுத்த
நாளிலேயே காப்பீட்டு நபர் சார்ந்த இ.எஸ்.ஐ. மருத்துவ அலுவலரிடம் அனுமதி
கடிதம் பெற்று அளித்திட வேண்டும்.
றிகிசிரிகிநிணி ஸிகிஜிணிஷி
ஷிறீ.ழிஷீ. றிக்ஷீஷீநீமீபீuக்ஷீமீ றிக்ஷீஷீஜீஷீsமீபீ ஸிணீtமீs ( வீஸீ ஸிs.)
1. சிகிஸிஞிமிளிலிளிநிசீ & சிகிஸிஞிமிளி ஜிபிணிஸிகிசிமிசி ஷிஹிஸிநிணிஸிசீ
ணீ. சிஷீக்ஷீஷீஸீஷீக்ஷீஹ் ஙிஹ்-ஜீணீss ஷிuக்ஷீரீமீக்ஷீஹ் சிகிஙிளி 1,26,000
தீ. க்ஷிணீறீஸ்மீ ஸிமீஜீறீணீநீமீனீமீஸீt 1,26,000
நீ. சிஷீக்ஷீக்ஷீமீநீtவீஷீஸீ ஷீயீ நீஷீஸீரீமீஸீவீணீறீ சிஷீனீஜீறீமீஜ் பிமீணீக்ஷீt ஞிவீsமீணீsமீs 1,26,000
பீ. சிஷீக்ஷீஷீஸீஷீக்ஷீஹ் ஙிஹ்-ஜீணீss ஷிuக்ஷீரீமீக்ஷீஹ் றிஷீst கிஸீரீவீஷீஜீறீணீstஹ் 1,26,000
மீ. சிஷீக்ஷீஷீஸீஷீக்ஷீஹ் ஙிணீறீறீஷீஸீ கிஸீரீவீஷீஜீறீணீstஹ் 83,700
யீ. ஙிணீறீறீஷீஷீஸீ கிஸீரீவீஷீஜீறீணீstஹ் வீஸீ tலீமீ க்ஷிணீறீஸ்ஷீtஷீனீஹ் 76,500
ரீ. ளிஜீமீஸீ பிமீணீக்ஷீt றிக்ஷீஷீநீமீபீuக்ஷீமீ 1,26,000
லீ. விவீtக்ஷீணீறீ க்ஷிணீறீஸ்ஷீtஷீனீஹ் 38,250
வீ. ளிஜீமீஸீ விவீtக்ஷீணீறீ க்ஷிஷீறீஸ்ஷீtஷீனீஹ் 1,15,000
ழீ. விவீtக்ஷீணீறீ க்ஷிணீறீஸ்மீ ஸிமீஜீறீணீநீமீனீமீஸீt 1,20,000
ளீ. கிஷீக்ஷீtவீநீ க்ஷிணீறீஸ்மீ ஸிமீஜீறீணீநீமீனீமீஸீt 1,26,000
றீ. ஞிஷீuதீறீமீ க்ஷிணீறீஸ்மீ ஸிமீஜீறீணீநீமீனீமீஸீt 1,26,000
னீ.ஜிஷீtணீறீ சிஷீக்ஷீக்ஷீமீநீtவீஷீஸீ ஷீயீ ஜிமீtக்ஷீஷீறீஷீரீஹ் ஷீயீ திணீறீறீஷீuts 1,26,000
ஸீ. றிமீக்ஷீனீணீஸீமீஸீt றிணீநீமீனீமீஸீt மினீஜீறீமீனீமீஸீtணீtவீஷீஸீ 10,000
+
சிஷீst ஷீயீ ஜீணீநீமீனீணீளீமீக்ஷீ
மிமி. ளிஸிஜிபிளிறிகிணிஞிமிசி ஷிஹிஸிநிணிஸிசீ
1. ஜிஷீtணீறீ பிவீஜீ ஸிமீஜீறீணீநீமீனீமீஸீt 1,250+மினீஜீறீணீஸீt
2. ஜிஷீtணீறீ ரிஸீமீமீ ஸிமீஜீறீணீநீமீனீமீஸீt 1,900+மினீஜீறீணீஸீt
கி.ளிஜீமீஸீ ஸிமீபீuநீஹ்வீஷீஸீ &
மிஸீtமீக்ஷீஸீணீறீ யீuஜ்ணீtவீஷீஸீ ஷீயீ றீஷீஸீரீ ஙிஷீஸீமீs 10,000
3. கினீஜீutணீtவீஷீஸீ ஷீயீ லிமீரீs
ணீ) ஙிமீறீஷீஷ் ரிஸீமீமீ 7,650
தீ) கிதீஷீஸ்மீ ரிஸீமீமீ 10,700
மிமிமி. ழிணிறிபிஸிளிலிளிநிசீ / ஹிஸிளிலிளிநிசீ
1. ஸிமீஸீணீறீ ஜிக்ஷீணீஸீsஜீறீணீஸீtணீtவீஷீஸீ 1,03,300
2. லிவீtலீஷீtக்ஷீவீஜீsஹ் 10,000
3. றிமீக்ஷீவீtஷீஸீமீணீறீ ஞிவீணீறீஹ்sவீs றிக்ஷீஷீநீமீபீuக்ஷீமீ றிமீக்ஷீ sவீttவீஸீரீ 1,000
4. பிணீமீனீஷீபீவீணீறீஹ்sவீs றிக்ஷீஷீநீமீபீuக்ஷீமீ றிமீக்ஷீ sவீttவீஸீரீ 1,500
5. ழிமீஜீலீக்ஷீஷீuக்ஷீணீtமீக்ஷீநீtஷீனீ 12,000
மிக்ஷி. ளிழிசிளிலிளிநிசீ
ஷிuக்ஷீரீவீநீணீறீ விணீஸீணீரீமீனீமீஸீt ஷீயீ விணீறீவீரீஸீணீஸீநீஹ் (சிணீஸீநீமீக்ஷீ)
ணீ. ஸிணீபீவீநீணீறீ விணீsமீநீtஷீனீஹ் 15,000
தீ. ஜிஷீtணீறீ ஜிலீஹ்க்ஷீஷீவீபீமீநீtஷீனீஹ் 15,000
நீ. ஜிக்ஷீணீஸீநீuக்ஷீமீtலீக்ஷீமீறீ ஸிமீsமீநீtவீஷீஸீ ஷீயீ றிக்ஷீஷீstணீtமீ 15,000
2. லிணீsமீக்ஷீ ஷீக்ஷீ ஸிணீபீவீணீtவீஷீஸீ ஜிக்ஷீமீணீtனீமீஸீt ஷீயீ சிணீஸீநீமீக்ஷீ 20,000
3. சிலீமீனீஷீtலீமீக்ஷீணீஜீஹ் – றிமீக்ஷீ ஞிணீஹ் 500 + நீஷீst ஷீயீ ஞிக்ஷீuரீs
4. ஜிஷீtணீறீ சிஹ்நீtமீநீtஷீனீஹ் 20,000
க்ஷி. ழிணிஹிஸிளிலிளிநிசீ
1. ணினீமீக்ஷீரீமீஸீநீஹ் லிவீயீமீ ஷிணீஸ்வீஸீரீ ளிஜீமீக்ஷீணீtவீஷீஸீ ஷீயீ ஙிக்ஷீணீவீஸீ
ணீஸீபீ ஷிஜீவீஸீணீறீ சிஷீக்ஷீபீ 40,000
2. கிபீஸ்ணீஸீநீமீபீ ஷிஜீமீநீவீணீறீவீக்ஷ்மீபீ ளிஜீமீக்ஷீணீtவீஷீஸீ ஷீஸீ ஙிக்ஷீணீவீஸீ ணீஸீபீ ஷிஜீவீஸீணீறீ சிஷீக்ஷீபீ suநீலீ
ணீs சிமீக்ஷீமீதீக்ஷீஷீஸ்ணீsநீuறீணீக்ஷீ ஷிuக்ஷீரீமீக்ஷீஹ், sளீuறீறீ ஙிணீsமீ suக்ஷீரீமீக்ஷீஹ், ஞிமீமீஜீ sமீணீtமீபீ
ஜிuனீஷீuக்ஷீ ஷீயீ ஙிக்ஷீணீவீஸீ, ஷிஹ்ஸீtணீநீtவீநீ ஷிuக்ஷீரீமீக்ஷீஹ் 40,000

க்ஷிமி. ளிறிஜிபிகிலிவிளிலிளிநிசீ
1. கிஸீஹ் சிணீtணீக்ஷீணீநீt ஷிuக்ஷீரீமீக்ஷீஹ் ஷ்வீtலீ ஷீக்ஷீ ஷ்வீtலீஷீut மிஸீtக்ஷீணீஷீநீuறீணீக்ஷீ 7,200
2. நிறீணீuநீஷீனீஷீ ஷிuக்ஷீரீமீக்ஷீஹ் (நிஷீஸீவீஷீtஷீனீஹ்) 6,300
3. ஷிநீறீமீக்ஷீணீறீ ஙிuறீளீவீஸீரீ ஸிமீtவீஸீணீறீ ஞிமீtணீநீலீனீமீஸீt ஷிuக்ஷீரீமீக்ஷீஹ் 10,800
4. ரிமீக்ஷீணீtஷீஜீறீணீstஹ் 10,800
5. லிணீsமீக்ஷீ ஜிக்ஷீமீணீtனீமீஸீt (ஙீமீக்ஷீஷீஜ் கிக்ஷீநீ லிணீsமீக்ஷீ) 1,500
6. க்ஷிவீtக்ஷீமீநீtஷீனீஹ் 10,800
7. திuஸீபீus திறீuக்ஷீமீsநீவீமீஸீ (கிஸீரீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் ஷீயீ ஸிமீtவீஸீணீ) 800
8. ளிக்ஷீதீவீtஷீtஷீனீஹ் 9,000

புனர் வாழ்வு திட்ட பயன்கள்

இ.எஸ்.ஐ. காப்பீடு பெற்ற பயனாளிகள் பணியிடை விபத்தின் காரணமாக
ஏற்பட்ட நிரந்தர ஊனத்தின் பாதிப்பிலிருந்து முழுவதுமாக நிவாரணம் பெறாமல்,
அவர்கள் செய்து வந்த தொழிலை தொடர்ந்து செய்ய இயலாமல் இருக்கும்
நிலையில், அவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களால் முடிந்த முறையான
தொழில்களை செய்வதற்குப் பயிற்சி அளிக்க இந்திய அரசாங்கத்தினால்
நடத்தப்படும் தொழில் சார்ந்த புனர் வாழ்வு மையங்களில் பயிற்சி அளிப்பதன்
மூலம் அவர்களுக்கு தேவையான பொருளாதார மறுவாழ்வு பெற
தொழிற்கல்வியினை இ.எஸ்.ஐ. திட்டம் வழங்குகிறது.

இந்த புனர்வாழ்வு திட்டத்தின் மூலம் பயிற்சியடைய விரும்பும்
தகுதியுடைய பயனாளி தனது நிரந்தர உடல் ஊனத்திற்கான உதவித்தொகையை
பெறும் கிளை அலுவலகத்தின் மூலமாக இ.எஸ்.ஐ. துணை மண்டல இயக்குநர்
அவர்களுக்கு தங்களது முறையான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

¥ தொழிற்பயிற்சி பெற விரும்பும் காப்பீடு பெற்ற தொழிலாளி பணியிடை
விபத்தில் அவருக்கு ஏற்பட்ட உடல் ஊனத்தின் இயலாமையின் அளவீடு
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்குழுவினரின் மதிப்பீட்டில் 40 சதவீதம் அல்லது
அதற்கு மேலும் சம்பாதிக்கும் திறனை இழந்தவராக உறுதி செய்யப்பட்டிருக்க
வேண்டும்.

¥ இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் நிரந்தர உடல் ஊனத்திற்கான உதவித்தொகை
பெறும் பயனாளியாக இருத்தல் வேண்டும், மற்றும் வேறு எந்த விதமான
ஆதாயம் தரும் பணியினையும் மேற்கொள்ளாதவராக இருத்தல் வேண்டும்.

¥ இத்திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்ற பயனாளி மேலே கூறப்பட்ட
நிபந்தனைகளுடன் அவர் தொழில் பயிற்சி பெற விரும்பும் மனுவை
சமர்ப்பிக்கின்ற அன்று 45 வயதிற்கு மிகாதவராய் இருத்தல் வேண்டும்.

¥ மறு வாழ்வு பயிற்சி மையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு அளிக்கப்படும்
பயிற்சியை முழுமையாக கற்க விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

மறுவாழ்வு மையத்தில் சேர முறையாக அங்க¦கரிக்கப்பட்ட நபர்களுக்கு
ரேடியோ, மற்றும் டி.வி. பழுதுபார்த்தல் தட்டெழுத்து மற்றும்
சுருக்கெழுத்துப்பயிற்சி, தையற்பயிற்சி, வயர் பின்னுதல், தச்சுத்தொழில் மற்றும்
உலோக வேலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

1. முறையாக அங்கீகரிக்கப்பட்டு புனர் வாழ்வு மையங்களில் தொழில் பயிற்சி
பெறும் பயனாளிகளுக்கு அவர்கள் பயிற்சி பெறும் காலங்களில் பயிற்சி
மையத்திற்கு சென்றுவர பயணச்செலவு இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ்
வழங்கப்படுகிறது.

2. பயிற்சி மையத்தின் பயிற்சி கட்டணம் அல்லது நாளன்றுக்கு
அதிகபட்சமாக உதவித்தொகை ரூ.145/- இவற்றில் எது அதிகமோ, அது புனர்
வாழ்வு மையங்களில் தங்கியிருக்கும் நாட்களுக்கு உதவித்தொகையாக
வழங்கப்படுகிறது.

3. பயிற்சி மையம் இல்லாத இடங்களில் உள்ள பயனாளிகள் பயிற்சி மையம்
சென்று வர இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் அல்லது பேருந்து கட்டணம்
அளிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி அடுத்தவரின் துணையின்றி பயணம்
செய்ய இயலாத ஊனமுற்ற தொழிலாளர்களுக்கு தக்க மருத்துவரின்
பரிந்துரையின் பேரில் ஒரு உதவியாளரை அழைத்து செல்லவும் பயணப்படி
வழங்கப்படுகிறது.

கீழ்க்காμம் இடங்களில் இந்திய அரசாங்கத்தால் புனர் வாழ்வு மையங்கள்
நடத்தப்படுகின்றன. அம்மையங்களுக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தினால்
அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகள் தொழில் சார்ந்த பயிற்சி பெற
அனுமதிக்கப்படுகிறார்கள்.

பெங்களூர், கல்கத்தா, ¬உறதராபாத், சென்னை கவுகாத்தி, திருவனந்தபுரம்,
புவனேஷ்வர், அகர்தலா, லூதியானா, ஜபல்பூர், அகமதாபாத், மும்பை, கான்பூர்,
பரோடா, பாட்னா, புதுடெல்லி, மற்றும் ஜெய்பூர்.

தீர்ப்பாயங்கள்

தொழிலாளர் காப்பீட்டு நீதிமன்றத்தில் காப்பீடு பெற்ற
தொழிலாளர்களுக்கும், தொழிலக உரிமையாளர்களுக்கும் மற்றும் இ.எஸ்.ஐ.
கார்ப்பரேஷன் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்படும் தகுதி மற்றும் உரிமை சட்ட
சிக்கல்கள் தீர்த்துக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கை செய்பவரின் உரிமையை மேலும் வலியுறுத்தவும்
பயனுள்ளதாக்கவும் காப்பீடு பெற்ற நபர்கள் தொழிலாளர் காப்பீடு நீதிமன்றத்தில்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண மனு செய்யும் உரிமை உள்ளது. இந்த நீதிமன்றத்தில்
மாநில அரசு நியமித்துள்ள நீதிபதி இருக்கிறார். இதுபோன்ற விஷயங்களில்
சிவில் நீதிமன்றத்தின் சட்ட வரம்பு தடை செய்யப்படுகிறது.
வழங்கப்பட்ட பயன்களை மீண்டும் பெறுவது, மற்றும் திரும்ப
வசூலிப்பது, சட்டப்பூர்வ தகுதி பெறாத எந்த பயனையாவது ஒரு காப்பீடு
பெற்றுள்ள நபர் பெற்றுக்கொண்டால் அவைகளை சம்பந்தப்பட்ட நபர்
கார்ப்பரேஷனுக்கு திரும்ப செலுத்தியாக வேண்டும் என்கிற நிர்பந்தம் உள்ளது.
தவறுதலான அறிக்கைக்கு தண்டனை

தவறான அறிக்கை அல்லது முறைகேடான பிரதிநிதித்துவத்தை
அளித்திருந்தால் அல்லது உரிமையற்ற பயன்களை பெறும் நோக்கத்திற்காக
முறைகேடு செய்திருந்தால் அது தொழிலாளர் அரசு காப்பீடு சட்டத்தின் படி
தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இதற்காக ஆறு மாத சிறை தண்டனை
அல்லது ரூ.2000/- (இரண்டாயிரம் ரூபாய்) அபராதம் அல்லது இரண்டுமே
விதிக்கப்படும்.

ஒய்வு பெற்ற காப்பீட்டு நபர்களுக்கான மருத்துவ வசதி

காப்பீடு பெற்றிருக்கும் தொழிலார்களுக்கும் அவர்கள் பணியிலிருந்து
ஓய்வு பெறும் போது மருத்துவ உதவி, இ.எஸ்.ஐ. கழகத்தால் அளிக்கப்படுகிறது.
இந்த மருத்துவ உதவி ஓய்வு பெற்ற நபருக்கு மட்டுமின்றி அவரைச் சார்ந்த
கணவன் / மனைவிக்கு கிடைக்கும்.
இதற்கான நிபந்தனைகள்.

(1) காப்பீடு பெற்றிருந்த நபர் வயது மூப்பின் காரணமாக பணி ஓய்வு
பெற்றிருக்க வேண்டும் இயலாமை மற்றும் விருப்பு ஓய்வில் (வி.ஆர்.எஸ்.)
பணியிலிருந்து ஓய்வு பெற்ற நபருக்கு இந்த மருத்துவ உதவி கிடைக்காது.

(2) ஒய்வு பெறுவதற்கு முன், காப்பீட்டாளர், தமது முழு பணிக்காலத்தில்
குறைந்தது ஐந்து ஆண்டு காலமாவது இ.எஸ்.ஐ. திட்டத்தில்
உறுப்பினராக இருந்திருத்தல் அவசியம்.

(3) இதற்கான கட்டணம் மாதம் ரூ.10/- வீதம் ஒரு வருடத்திற்கு மொத்தமாக
ரூ.120/- முன் கூட்டியே செலுத்த வேண்டும். மேலும் தேவைப்படும்
விவரங்களை அருகில் உள்ள இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷனின் கிளை
அலுவலகத்தை அμகி பெற்றுக்கொள்ளலாம்.

மற்றும், வேலை செய்யும் போது நேரிட்ட விபத்தின் காரணமாக
நிரந்தர ஊனம் ஏற்பட்டு விபத்திற்கு முன்பு செய்த வேலையினை தொடர்ந்து
செய்ய இயலாமல் போகும் சமயத்திலும் மேலே கூறப்பட்ட விதிகளுக்கும்
நிபந்தனைகளுக்கும் உட்பட்டு மருத்துவ வசதி பெற்றுக்கொள்ளலாம்.

“இராஜீவ் காந்தி ஸ்ரமிக் கல்யாண் யோஜனா திட்டம்”

தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டப்படி (ணிஷிமி கிநீt) , பதிவு பெற்ற
காப்பீட்டு நபர்களுக்கு உரிய காரணங்களால் நேரிடும் பணியிழப்பிற்கு
(ஹிஸீமீனீஜீறீஷீஹ்னீமீஸீt) பண உதவி பெற்றுக்கொள்ள ஏதுவாக உருவாக்கப்பட்டு
1-4-2005 முதல் செயலாக்கப்பட்டுள்ள ஒரு உன்னதத் திட்டம்.

இத்திட்டத்தின் படி பாதிப்புக்குள்ளாகும் காப்பீட்டு நபர்கள்
(மிஸீsuக்ஷீமீபீ றிமீக்ஷீsஷீஸீs) அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை அல்லது மீண்டும் பணி
வாய்ப்பு கிடைக்கும் வரை இதில் எது குறைந்த காலமோ அதுவரை பண உதவி
பெற்றுக்கொள்ளலாம். இப்புதிய திட்டம் “இராஜீவ் காந்தி ஸ்ரமிக் கல்யாண்
யோஜனா” என்று மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு, தொழிலாளர் அரசு
காப்பீட்டுக் கழகத்தின் வாயிலாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
காப்பீட்டு நபர்கள் “பணியிழந்தோர்” (ஹிஸீமீனீஜீறீஷீஹ்மீபீ) என உறுதி செய்யும்
காரணிகள் (யீணீநீtஷீக்ஷீs)
1. தொழிற்சாலைகள் / நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படுதல் (றிமீக்ஷீனீணீஸீமீஸீt
நீறீஷீsuக்ஷீமீ)

2. காப்பீட்டு நபர்கள், தொழிற்சாலையில் / நிறுவனங்களில் ஏற்படும்
விபத்துகளினால் இல்லாமல் வெளியிடங்களில் தங்கள் சொந்தக்
காரணங்களினால் ஏற்படும் விபத்துகளினால் (ஸீஷீஸீ-மீனீஜீறீஷீஹ்னீமீஸீt வீஸீழீuக்ஷீஹ்)
நிரந்தர உடல் திறன் இழப்பு (றிமீக்ஷீனீணீஸீமீஸீt பீவீsணீதீவீறீவீtஹ்) காரணமாக
பணியிழப்பிற்கு (க்ஷீமீtக்ஷீமீஸீநீலீனீமீஸீt) உட்படுத்தப்படுதல்.
3. ஆட்குறைப்பு
பணியிழப்புப் பண உதவிக்கான (ஹிஸீ மீனீஜீறீஷீஹ்னீமீஸீt கிறீறீஷீஷ்ணீஸீநீமீ) நிபந்தனைகள்

1. பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் தாம் “பணியிழந்தோர்” என
உறுதிப்படுத்தப்பட்ட நாளன்று “காப்பீட்டு நபர்கள்” (மிஸீsuக்ஷீமீபீ ஜீமீக்ஷீsஷீஸீs)
எனும் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
2. பணியிழப்பு நாளுக்கு முன்னதாக உள்ள ஐந்து வருடங்களுக்கு (அதாவது
பத்து சந்தா கட்டண காலங்கள் (நீஷீஸீtக்ஷீவீதீutவீஷீஸீ ஜீமீக்ஷீவீஷீபீs) காப்பீட்டு – சந்தா
(சிஷீஸீtக்ஷீவீதீutவீஷீஸீ) செலுத்தப் பெற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3. 1-4-2005 நாளன்று அல்லது அந்நாளுக்குப் பிறகு பாதிப்புக்குள்ளாகும்
காப்பீட்டு நபர்கள் மட்டும் இப்புதிய திட்டப்படி பணியிழப்புப் பண உதவி
(ஹிஸீமீனீஜீறீஷீஹ்னீமீஸீt கிறீறீஷீஷ்ணீஸீநீமீ) பெறத் தகுதி உள்ளவர்கள்.
4. இதர சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் நடைமுறையிலுள்ள திட்டங்கள்
வாயிலாக இராஜீவ் காந்தி ஸ்ரமிக்
கல்யாண் யோஜனா திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது போன்ற உதவி பெற
தகுதி உள்ளவர்களாயிருக்கும் காப்பீட்டு நபர்களுக்கு இத்திட்டப் பயன்கள்
வழங்கப்பட மாட்டாது.

பணியிழப்புப் பண உதவி வழங்கும் செயல் முறைகள்

1. பணியிழப்பு நாளுக்கு முன்னதாக உள்ள நான்கு சந்தா கட்டண
காலங்களின் சராசரி தின ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் திட்ட அளவை உதவித்தொகை வீதம் பணியிழப்புப் பண உதவிக்கான உரிய அளவீட்டுத் தொகை
என நிர்ணயிக்கப்படும்.

2. பணியிழப்பு பணஉதவித் தொகையை மாதாந்திர அடிப்படையிலோ
அல்லது ஒரே மொத்தத் தொகையாகவோ தம் விருப்பத்திற்கு தேர்வு செய்து பாதிப்புக்குள்ளாகும் காப்பீட்டு
நபர்கள் அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை அல்லது மீண்டும் பணி
வாய்ப்பு கிடைக்கும் வரை இதில் எது குறைந்த காலமோ அதுவரை பண
உதவி பெற்றுக்கொள்ளலாம்.

3. காப்பீட்டு நபர்கள் நோய்க்கால உதவித்தொகை
தற்காலிக ஊன உதவித் தொகை அல்லது
பேறுகால உதவித்தொகை பெற தகுதி
பெற்றவராயிருந்தால் இராஜீவ் காந்தி ஸ்ரமிக் கல்யாண் யோஜனா
திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உதவித்தொகையுடன் இணைத்து
இவ்வகைக்கான உதவித்தொகை பெற இயலாது. இவ்வாறான நிலையில்
காப்பீட்டு நபர்கள் தம் விருப்பத்திற்கு தேர்வு செய்து ஏதாவது ஒரே ஒரு
வகையின் உதவித்தொகை மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.

4. இத்திட்டத்தின்படி உதவித்தொகை பெற தகுதி பெற்றவராயிருக்கும்.
காப்பீட்டு நபர்கள், மற்றும் குடும்பத்தினருக்கும் இ.எஸ்.ஐ. மருந்தகம்
இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

5. இத்திட்டத்தின்படி உதவித்தொகை பெற காப்பீட்டு நபர்கள் தமது
பணியிழப்பு நாளுக்கு முன்னதாக தாம் சார்ந்திருந்த தொழிலாளர் அரசு
காப்பீட்டுக் கழகத்தின் கிளை அலுவலகத்தில் உரிய கோரிக்கை படிவத்துடன் பணியிழப்பிற்கான சான்றாவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்

3 responses to “தொழிலாளர் கையேடு”

  1. kamatchi says:

    Esi complete டெலிபோன் நம்பர் தமிழ்நாடு

  2. Suresh says:

    நாங்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தில் 10ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்

  3. Suresh says:

    இதை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா

Leave a Reply