சுதந்திரபோராட்ட வீராங்கனை லஷ்மி சேஹ்கல் மாரடைப்பினால் மரணமடைந்தார். அவருக்கு வயது 97.
உடல் நிலை பாதிக்கப்பட்ட லஷ்மி சேஹ்கல் கடந்தவாரம் கான்பூர்
மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைபெற்று வந்தார். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாமலேயே அவர் இன்று காலை மரணமடைந்தார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தின் போது, சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றிவர் லஷ்மி சேஹ்கல். நாட்டின் சுதந்திரத்திற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் .