ஓர் இலக்கியவாதியின்  ஆன்மிக  அனுபவம் ! பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேரறிஞர் ரொமெய்ன் ரோலண்ட். இலக்கிய மேதை யான அவர், தமது இலக்கியப் பணி களுக்காக "நோபல் பரிசு' பெற்றவர். முதல் உலகப் போர் சமயம் அது. போரின் கொடுமைகள், ரோமெய்ன் ரோலண்டுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர், ""உலகப்போர் நடை பெறக் கூடாது!'' என்று, போரை எதிர்த்துப் பிரசாரம் செய்தார். அதனால் அப்போதைய பிரெஞ்சு அரசு அவரைச் சிறையில் அடைத்தது.

உலகப்போர் முடிந்ததும், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். வெளி உலகிற்கு வந்த அவர் பார்த்தது என்ன தெரியுமா? எங்கே பார்த்தாலும் ஒரே அழிவு. ஐரோப்பா முழுவதும் நோயால் பீடிக்கப்பட் டிருந்தது. போரின் கொடுமைகள், ஐரோப்பிய மக்களைச் சரியாகத் தூங்க விடாமல் துன்புறுத்திக்கொண்டிருந்தது. போரின் பயங்கரம் அதன் விளைவு கள் மக்களுக்கு இறைவன் மீது இருந்த நம்பிக்கையையே இழக்கும்படிச் செய்தது! தங்கள் கண் முன்னாலேயே பல்லாயி ரக்கணக்கான மக்கள் ஈவிரக்கமின்றிக் கொல் லப்பட்டதையும், கை கால் இழந்து போன தையும், ஒரே ஓர் இரவுக்குள் தங்கள் உறவினர்களை இழந்ததையும் பார்த்த யார்தான் கடவுளை நம்புவார்கள்?

"கடவுள் என்று ஒருவர் இருந்தால், இப்படிப்பட்ட கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு அவர் எப்படி மௌனமாகச் சும்மா இருக்க முடியும்?' இந்தக் கேள்வி, மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பலமாக ஓங்கி ஒலித்தது. அது மக்களின் கடவுள் நம்பிக்கையைத் தகர்த்துச் சிதற அடித்தது. ரோமெய்ன் ரோலண்ட் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர். தனக்குள் இருக் கும் கடவுளின் எல்லையற்ற தன்மையை உணர்ந்தவர்.

அவர் மக்களுக்கு அறிவுரைகள் சொல் லத் துவங்கினார். ஆனால் அதன் காரணமாக மக்கள் அவரைப் "பைத்தியக்காரன்' என்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் அவர் இவ்விதம் எழுதினார்: ""உள்ளத்தில் இருக்கும் இறைவனின் எல்லையற்ற சக்தியை நான் அறிவேன். அந்தச் சக்தியின் இருப்பிடத்தை அடைவதற்கு உரிய திறவுகோல் தான் என்னிடம் இல்லை. ""ஷேக்ஸ்பயர், பீதோவான், டால்ஸ் டாய் போன்ற யாராலும் எனக்குள் இருக்கும் இறைவன் சாம்ராஜ்யத்திற்கு அழைத்துச் செல் லும் படிக்கட்டுகளின் தொலைந்துபோன சாவியை எனக்குத் தர முடியவில்லை.'' இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் ரோமெய்ன் ரோலண்டுக்கு, "ஸ்ரீ ராம கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு' என்ற நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதைப் படித்து முடித்ததும், அவருக்குள் ஒரு தெய்விக ஒளி பிறந்தது; இறைவனைப் பற்றிய ஓர் அருள் தாகம் ஆவேசமாக எழுந்தது ""இதோ, இயேசுகிறிஸ்து மீண்டும் பிறந்திருக்கிறார்!'' என்று மகிழ்ச்சியுடன் அவர் கூவினார்.

மனித வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய பார்வையை, ஸ்ரீ ராம கிருஷ்ணர் அவருக்குக் காட்டினார். ரோமெய்ன் ரோலண்ட் ஒரு கிறிஸ்தவர். இயேசுகிறிஸ்து பிறந்து சுமார் 2000 ஆண்டுகள் ஆகின்றன. கிறிஸ்தவச் சிந்தனையையொட்டி ரோமெயின் ரோலண்ட், "இது வரையில் இந்தியாவில் தோன்றிய ஆன்மிகச் சிந்தனைகளின் ஆன்மிக அனுபவங்களின் ஓர் ஒட்டு மொத்தமான வடிவம்தான் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்' என்று கருதினார். அதை அவர் இவ்விதம் எழுதியிருக்கிறார்: ""முன்னூறு மில்லியன் மக்கள் வாழ்ந்த கடந்த இரண்டாயிரம் ஆண்டு ஆன்மிக வாழ்க்கையின் முழுமை தான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் தெய்விக வாழ்க்கை.''

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்களில் ரோமெய்ன் ரோலண்ட், இயேசுநாதரைக் கண்டார். ஆனால் இந்தத் தடவை அது இன்னும் வளம் பெற்று மிகவும் செழுமையாக இருந்தது. "உலகப் போரின் ஆயுதங்களுக்கு அடிமை யாகி ஐரோப்பிய மக்கள் எந்த ஆன்மிகத்தை இழந்துவிட்டிருந்தார்களோ, அந்த ஆன்மிகத்திற்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகளின் சாவிதான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருள் வாழ்க்கை' என்று அவர் கருதினார். "இறைவனின் சாம்ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகளின் தொலைந்துபோன சாவியை ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை, தான் எழுதுவதன் மூலம் உலக மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்' என்ற எண்ணம் அவரது உள்ளத்தில் தீவிரமாக எழுந்தது.

இந்தப் புதிய தேவதூதர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருள்மொழிகளை எவ்வளவு விரைவில் இயலுமோ, அவ்வளவு விரைவில் ஐரோப்பா முழுவதும் பரப்புவதற்கு அவர் அவசரப்பட்டார். 1929ஆம் ஆண்டு "ஆசியா (Asia Magazine) ' என்ற பத்திரிகை, ரோமெய்ன் ரோலண்ட் எழுதிய ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றைத் தொடராக வெளியிட்டது. அப்போது அந்தப் பத்திரிகை எழுதிய ஒரு குறிப்பு இது: ""ஸ்ரீ ராமகிருஷ்ணரின் தெய்விக வாழ்க்கை மிகவும் தெளிவான செய்தியை மேலைநாட்டு மக்களுக்கு வழங்குகிறது. இந்த ஹிந்து சந்நியாசி அளிக்கும் செய்தியை நாம் உலகம் முழுவதும் பரப்பி, மனித ஆன்மாவின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவ முடியும்.'' ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் பற்றி ரோமெய்ன் ரோலண்ட் இரண்டு நூல்கள் எழுதியிருக் கிறார். அவை உலகம் முழுவதும் ஆங்கிலம் அறிந்த மக்களிடையே தரமான நூல்களாக இன்றும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

நன்றி ; சுவாமி ராகவேசானந்தர்

Leave a Reply

Your email address will not be published.