குடியரசு துணை தலைவர் தேர்தல் ஜஸ்வந்த் சிங்கிற்கு அ.தி.மு.க ஆதரவு குடியரசு துணை தலைவர்_தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டி யிடும் ஜஸ்வந்த் சிங்கிற் கு அ.தி.மு.க ஆதரவளிக்கும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; குடியரசு துணை தலைவர் தேர்தலில் ஜஸ்வந்த்_சிங்கிற்கு அ.தி.மு.க ஆதரவு தரும் அவர் கடந்த 28 வருடங்களாக எனது மரியாதை குரிய நண்பர். நாடாளு மன்றத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றியவர்.

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலில்போட்டி இருக்க வேண்டியது மிக அவசியம். ஆளும்கட்சி வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதற்காக எதிர் கட்சி போட்டியிடாமல் இருக்கக்கூடாது. ஜனநாயகத்தில் எதிர்க் கட்சி தனது கடமையைச்செய்ய வேண்டும் என்பதற்காகவும், தனிப்பட்ட முறையில் நண்பர் என்பதற்காகவும் ஜஸ்வந்த்சிங்கை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார் .

Leave a Reply