உமாசங்கரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி  பா.ஜ.க  சாலை மறியலில் ஐஏஎஸ்., அதிகாரி உமாசங்கரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாகர்கோவில் அருகே_நடந்த சாலை மறியலில், பாரதிய ஜனதா மாநில தலைவர், பொன். ராதா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் நாடு ஒழுங்கு_நடவடிக்கை கமிஷனராக இருக்கும் உமா சங்கர், நாகர்கோவில் மேற்கு பரசேரியில், இந்திரா ஆதி திராவிடர் காலனியில் நடைபெற்ற “கன்வென்ஷன்’ நிகழ்ச்சியில், அரசு வாகனத்தில் சென்று கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு, காவல் துறையினர் தடை விதித்திருந்த போதும் , உமாசங்கர் கலந்துகொண்டது, சர்ச்சையை கிளப்பியுள்ளது .

அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா சார்பில் புகார் தரப்பட்டது; ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைகண்டித்து, பாரதிய ஜனதா சார்பில் பரசேரி சந்திப்பில்_மறியல் நடந்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மறியலில் பங்கேற்றனர். பிறகு மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply