பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டனம்  தெரிவிக்க வேண்டும் ; பாஜக பாகிஸ்தானில் வசித்து வரும் ஹிந்துக்கள் பல துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவது தொடர்பாக அந்நாட்டு தூதரை அழைத்து நமதுகண்டனத்தை தெரிவிக்கவேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது .

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து 150-க்கும் அதிகமானோர் அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக் கிழமை தப்பிவந்தது குறித்து மக்களவையில் பாஜக கவலை தெரிவித்துள்ளது . ராஜ்நாத் சிங் பேசியதாவது :÷ பாகிஸ்தானில் சிறுபான்மை யினரான ஹிந்துக்களும், சீக்கியர்களும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலையில் இருக்கின்றனர் .

அந்த நாட்டிலிருந்து ஏற்கெனவே தப்பிவந்த 20 பேர், இந்திய குடியுரிமையை கோரி விண்ணப்பித்து உள்ளனர். சமீபத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு யாத்திரை வந்த 250 பேரிடம், பாகிஸ்தான் சிறுபான்மையினரின் துயரங்கள் குறித்து எதுவும் தெரிவிக்க கூடாது என உறுதி மொழி பெறப்பட்டதாக தெரிகிறது .

பாகிஸ்தானில் ஹிந்து_இளைஞரை மதம் மாற்றிய சம்பவம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. அதைத்தொடர்ந்து இளம் பெண் ஒருவரை கடத்தி, மத மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் வெளிவந்தது. இவைதொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்க தூதரக அலுவலகங்களில் ஹிந்து அமைப்பு களின் தலைவர்கள் புகார்தெரிவித்துள்ளனர்” என்றார்.

Tags:

Leave a Reply