அசாம் கலவரத்தை கண்டித்து ஆசாத் மைதானத்தில் நடந்த பேரணியில் உருவான கலவரத்தில் இருவர் கொல்லப்பட்டனர். பெண் போலீசார் அவமனபடுத்தபட்டனர் , 50க்கும் அதிகமான காவல்துறையின காயம் அடைந்தனர். பொது சொத்துக்கள் சேதபடுத்தபட்டன இதனை தொடர்ந்து இந்த கலவரத்தை அடக்கத்தவறிய கமிஷனர் பட்நாயக்கை

இடமாறுதல் செய்ய வேண்டும் என்று பா,ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வந்தநிலையில் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது, இது மக்களின் உணர்ச்சியை அவமதிக்கும்செயல் என்று அம்மாநில பாஜக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் மாதவ் பண்டாரி, ‘கமிஷனர் அருப்பட்நாயக்கின் செயல் பாட்டை பாராட்டி அரசு அவருக்குப் பதவிஉயர்வு வழங்கியிருப்பதாக, உள் துறை அமைச்சர் ஆர் ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார் . அப்படி வழங்கியிருந்தால், ஆசாத் மைதானத்தில் நடந்தசம்பவம், கமிஷனரின் சிறந்த செயல்பாடா?’, ‘அரசின் தற்போதைய நடவடிக்கைகலை பார்க்கும் போது ஆசாத் மைதானத்தில் நடந்தசம்பவங்கள், ஆளும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்சின் ஆசியுடன் நடந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்படுகிறது’ என்றார்.

Tags:

Leave a Reply