நம் நாடு எண்ணற்ற பிரதம மந்திரிகளை சந்தித்து உள்ளது அதிலும்
அடல் பிஹாரி வாஜ்பாய் மாதிரியான நல்ல மனிதர்களையும் சந்தித்து உள்ளது . என்றல் பெருமை பட வேண்டிய விஷயம் தான்..

நம் நாட்டில் பாதுகாப்பு கொள்கை எவ்வளவு முக்கியம் எனபது லால்

பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு அடுத்து இவர் தான் புரிய வைத்தார்.

நம் நாட்டில் கார்கில் போர் நடந்து கொண்டு இருந்த சமயத்தில் இவர்தான் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் . அப்பொழுது நம் நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் ஒரு பயம் நம் நாட்டை நாம் இழந்து விடுவோமா என்ற பயம்தான்.

அந்த மாதிரி யாரும் பயப்பட வேண்டாம் நம் நாட்டில் நிறைய ஆயுதகளும் ,போர் கருவிகளும் இருக்கிறது நிறைய படைகளும் இருக்கிறது  நம் நாட்டை நாம் ஒரு போதும் இழந்து விட மாட்டோம் என்ற ஒரு நம்பிகையை கொடுத்த மனிதர் இவர்தான் .

எத்தனை பேர் வந்தாலும் ஒரு கை என் இந்தியா பார்த்து விடும் என்ற நம்பிகை இவர் இடம் தான் பிறந்தது , அந்த கார்கில் போரில் எண்ணற்ற வீரார்கள் இறந்தார்கள் அவர்களை பற்றியும் ஒரு நிமிடம் நினைத்து தான் ஆக வேண்டும் . அவர் அன்று ஆரம்பித்த பாதுகாப்பு கொள்கை தான் இன்று எந்த நாடும் நம் நாட்டை பார்த்து அச்சம் படுகிறது .

இன்று அவர் மீடியாகளில் வருவது இல்லை வயசு ஆகி விட்டது அதனால் தான் ! இவருக்கு வேண்டும் என்றல் வயது ஆகி இருக்கலாம் ஆனால் இவர் ஆரம்பித்த எத்தனையோ நல்ல திட்டங்களும் பாதுகாப்பு கொள்கைக்கும் என்றுமே வயது ஆகாது …………

இந்த மாதிரியான ஒரு நல்ல மனிதர்கள் என் நாட்டிற்கு வந்தால் தான் என் நாடு எல்லா வற்றிலும் பெருமை மிகுத்த நாடாக இருக்கும்

நன்றி ; ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *