நித்திய அன்னதான திட்டத்தை அறிவித்த  தமிழக முதல்வருக்கு   இந்து முன்னணி பாராட்டு தமிழகத்தின் முக்கியத் திருக்கோவில்களில் நித்திய அன்னதான_திட்டத்தை அறிவித்து செயல்படுத்துவதற்கு உத்திர விட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவை இந்து முன்னணி பாராட்டுகிறது.

தமிழக திருக்கோவில்களில் தொன்று தொட்டு பல்வேறு அறங்கள் நடைபெற்றுவந்தன. அதில் முக்கியமானது அன்னதானதர்மம். அதை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டவர் தமிழக முதல்வர் அவர்கள். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் முக்கிய திருத்தலங்களில் நித்திய அன்னதான திட்டத்தை_அறிவித்து ஷ்ரீரங்கம் ஆலயத்தில் தொடங்கி வைத்துள்ளார். இந்து முன்னணி இதனை பாராட்டுகிறது வரவேற்கிறது, .

இந்த அன்னதானத்தை இறைவனுக்கு நிவேதனம்செய்து, அன்ன பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கிடவும், உணவு உண்ணும்முன் பக்தர்கள் அந்ததல இறைவனின் நாம வாளியைப் பாராயணமாக, அதாவது, ‘ஓம் நமோநராயாணா’, ‘ஓம் நமச்சிவாயா’, ‘ஓம் சரவணபவா’, ‘ஓம் சக்தி’ – என்று அதற்குரிய இறைவனின் நாமத்தை எல்லோருமாக சொல்லி உண்பது , பக்தர்களுக்கு அத்தல இறைவனின் அருளால் இந்த அன்னப் பிரசாதம் கிடைத்திருக்கிறது என்ற பக்திஏற்படுத்தும். இந்த பக்தி பூர்வமான செயல்பாட்டை ஆலயத்தில் இருக்கும் பட்டாச் சார்யர்கள், சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் மூர்த்திகள் உள்ளிட்டோர் முன்னின்று செயல்படுத்தவேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பது வழக்குமொழியாகும் . நாம்செயல்பட சக்தி வேண்டியிருக்கிறது. அந்தச்சக்தியை தருவது அன்னம். இந்த உடலை அன்னமயகோஷம் என யோக நூல்கள் கூறுகின்றன. உடல் இயங்கசக்தியை தருவது அன்னம். அதுவும் திருக்கோவில் இறைவனை தரிசிக்கவரும் பக்தர்கள் தரும் அன்னபிரசாதம் அறம் வளர்க்கும் நல்லதோர் செயல்பாடு.

இந்த அறக்கொடை தொடர்ந்து_நடைபெறவும், இந்து சமய அறநிலையத் துறை செயல் திட்டம் வகுக்கவேண்டும். மேலும் இந்த நற்செயலுக்கு தமிழக அரசின் முக்கியபங்கேற்பும் இருக்கவேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

Leave a Reply