கூடன்குளத்தில் மட்டும் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம், அமர்க்களம் ? அமெரிக்காவில் 65 அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றுககாக 104 வர்த்தக அனுமதிகள் அளிக்கபபட்டிருக்கின்றன. அங்கு, அணு மின் நிலையங்களுக்கு 10கிலோ மீட்டரைவிட அருகில் வசித்துவருகிற மக்களின் எண்ணிக்கை 30 லட்சம்.

சரி, அமெரிக்கானாலே நம்நாட்டவருக்கு ஒரு அலர்ஜி: அதனால் அந்நாட்டுக்கணக்கை விடுவோம். உலகிலேயே அதிகளவில் அணு மின் உற்பத்தியை பயன் படுத்துகிற நாடு பிரான்ஸ்: அந் நாட்டின் மின்சாரத்தேவையில் 77% அணு மின் நிலையங்கள் தான் பூர்த்திசெய்கின்றன. பெல்ஜியத்தில் 54% அணு மின் உற்பத்தி. ஸ்வீடனில் 40%: சுவிட்சர்லாந்தில் 41 %. இவையெல்லாம் சுற்றுச் சூழல் முதற் கொண்டு, மனித உரிமைவரை பல அடிப்படை விஷயங்களில் மிகஅக்கறை செலுத்துகிற நாடுகள். தென்கொரியாவில் 34 சதவிகிதம் அணு மின் உற்பத்தி. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சரி, இவையெல்லாமே மேற்கத்திய நாடுகள்: அதனால் நல்லஎண்ணம் கொண்ட நாடுகள் அல்ல என்றே வைத்துக்கொண்டு, நம்நாட்டின் மீது மிகவும் நல்லெண்ணம்கொண்ட சீனாவை பார்ப்போம். அங்கே 40 அணு மின் நிலையங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் தற்போது 19 அணு மின் உயர்ப்பத்தி நிலையங்கள் இருக்கின்றன . ராஜஸ்தானில் ஆறு , மகாராஷ்ட்ராவில் நான்கு , குஜராத்தில் இரண்டு , கர்நாடகத்தில் மூன்று , தமிழ் நாட்டில் கல்பாக்கம் இரண்டு , உத்திரப் பிரதேசம் இரண்டு .

இதுதவிர, இந்தியாவில் தற்போது கர்நாடகாவில் 1, ராஜஸ்தானில் 2, குஜராத்தில் 2, மகாராஷ்ட்ரத்தில் 4 நிறுவப் பட இருக்கின்றன. இவற்றுடன் கூடன் குளமும் ஒன்று.

உண்மை நிலை இப்படி இருக்க, கூடன் குளத்தில் மட்டும் இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் , அமர்க்களம் ஏன்? கல்பாக்கம் அணு மின் நிலையம் கிட்டத்தட்ட 30 வருடங்களாக இயங்கி வருகிறதே? அதனால் மானோ, மீனோ, மனிதனோ பாதிக்கப்பட வில்லையே! பலலட்சம் மக்களைக்கொண்ட சென்னைக்கு அருகில் கல்பாக்கம் உள்ளதால் , சென்னைக்கு என்னகேடு வந்தது? கல்பாக்கத்திலேயே பலர் வசிக்கிறார்களே! குழந்தைகள்கூட அங்கேயே இருந்து பள்ளிக்கு செல்கின்றனவே?

அங்கு உருவகத ஆபத்து, கூடங்குளத்தில் மட்டும் ஏற்ப்பட்டுவிடுமா? இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ள மிகதிறமையான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடங்குளத்தில் செய்யப்பட்டிருககின்றன என விஞ்ஞானிகள் தெரிவித்தார்களே?

இப்படி யெல்லாம் இருக்க, அங்கே ஆர்ப் பாட்டம் நடக்கிறது எனில் – அதற்கு எதோஒரு கேட்டநோக்கம் கொண்ட பின்னணி இருக்கிறது என்று தான் அர்த்தம். பற் பல நிபுணர்கள் கூறுவதை விட, ஒரு உதயகுமார் கூறுவது தான் சத்தியம் என சில ஆயிரம் மக்கள் எப்படி_ஏற்கிறார்கள்? அங்கே ஆர்ப்பாட்டம் மும் முரமாகிற போது, மாதா கோயில் மணி ஓயாமல்_ஒலிப்பது ஏன்?

இதில் எதோ ஒரு சதி உள்ளது . இதை முறியடித்து, அணு மின் உற்பத்தியைத் துடங்குவதற்கு  ஆவனசெய்வது, மத்திய-மாநில அரசுகளின் கடமை. இப்போது காவல் துறை அராஜகம் செய்திருப்பதாக கூறியிருப்பது பொய். காவல்துறையுடன் ஆர்ப்பாட்டககாரர்கள் விளையாடுகிறார்கள். காவல்துறையுடன் மோதுகிறார்கள். அவர்களை ஒடுக்கவேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் , அது ஆர்ப்பாட்ட தலைமையின் பொறுப்பேதவிர, அரசின் தவறல்ல.

'பேச்சுவார்த்தை, பேச்சு வார்த்தை' என்கிறார்கள். தமிழக முதல்வர் இவர்களுடைய 'அச்சங்களையும் 'கவலைகளையும் போக்கு வதற்காக, இவர்களிடம் பேச்சு நடத்தியாகிவிட்டது. பலமுயற்சிகளை எடுத்தாகி விட்டது. இனி அவரும் பொறுமைகாட்ட வேண்டிய அவசியமில்லை.

ஆர்ப்பாட்டக் காரர்கள், அணு மின் நிலையத்தையே பாதிக்கிற வகையில் எதுவும் செய்யமாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதமில்லை. நாட்டு வெடிகுண்டை வீசினால்கூட பேராபத்து விளையலாம். அதைத் தான் ஆர்ப்பாட்டத்தலைமை விரும்புகிறது. அதன்பிறகு பழியை 'விஷமிகள்' மீதோ, 'அணுமின்நிலைய ஆதரவாளர்கள்' மீதோ போட்டு விட்டு, இந்த ஆர்ப்பாட்டத்தலைமை, தங்களுடைய அடுத்த வேட்டைக்கு போய் விடலாம். அம்மாதிரி ஏதாவது நடப்பதற்குமுன், அவர்கள் பலவந்தமாக அப்புறப் படுத்தப்பட்டு, அணு மின் நிலையத்திற்குப் பாதுகாப்பு தரப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டக் காரர்கள், சமுத்திரத்தில் இறங்கி விளையாடு கிறார்கள். 'சமுத்திர ஸ்நானம்' புண்ணியத்தைதரும். 'ஸாகரம் ஸர்வ பாப ஹரம்' – ஸமுத்திரம் சகல பாபங்களையும் நாசம்செய்யும் – என கூறப்பட்டிருக்கிறது. அந்த பாபநாசத்தை, அவர்கள் பெற்றுக்கொள்ளட்டும். மற்றவர்கள், மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளட்டும்.

  இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள்

Leave a Reply