சோனியாவின் வெளிநாட்டு பயணச்செலவு எவ்வளவு என்பதை வெளியிடவேண்டும் சோனியா காந்தியின் வெளிநாட்டு பயண செலவு மற்றும் அவரது மருத்துவ சிகிச்சைக்கான செலவு எவ்வளவு என்பதை காங்கிரஸ் கட்சி வெளியிடவேண்டும் மேலும் அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கவேண்டும் என்று நாங்கள் வாழ்த்துகிறோம். ‘ என, பா.ஜ.க தகவல் தொடர்பாளர், நிர்மலா சீதா ராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; சோனியா காந்தியின் வெளிநாட்டு பயணச்செலவு குறித்து , பத்திரிகைகளில் வந்த செய்தியையே , குஜராத் முதல்வர், நரேந்திரமோடி சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினார். இதற்கு காங்கிரஸ் கட்சி நேரடியாக, பதில் தராமல் சோனியாவின் உடல் நலம் குறித்து கேள்வி எழுப்புவதாக கூறி, பிரச்னையை திசைதிருப்ப முயல்கிறது.

அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், சோனியாவின் வெளிநாட்டு பயணச்செலவு எவ்வளவு என்பதை வெளியிடவேண்டும். 1,880 கோடி ரூபாய் செலவிட படவில்லை எனில், உண்மையில் செலவானது எவ்வளவு தொகை என்பதை பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும். அரசுப்பணம் செலவிடப்படவில்லை என்றால் அதையும் சொல்லலாம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி , நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும் என்று நாங்கள் வாழ்த்துகிறோம். அதேநேரம் , அவரின் வெளிநாட்டு பயணங்களுக்காக, சிகிச்சைக்காக, அரசின் பணம் செலவிடப்பட்டிருந்தால், அதை வெளியிடவேண்டியது அவசியமாகும்

Leave a Reply