பிரதமர் தவறான தகவல்களையே குறிப்பிட்டு வருகிறார் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் வெளி நாட்டுப் பயண விஷயத்தில் தவறான தகவல்களையே பிரதமர் குறிப்பிட்டு வருவதாக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜாம் நகரில் வெள்ளிக் கிழமை இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மேலும் அவர் தெரிவித்ததாவது ; : ஹிசார் நகரைச்சேர்ந்த ரமேஷ் சர்மா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்திய தூதரகங்களில் இருந்து சோனியாவின் வெளி நாட்டுப் பயணம் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார். இதன் படி, அவரது வெளி நாட்டுப் பயணங்களுக்கு அரசு பலலட்சங்களை செலவுசெய்தது தெரியவந்துள்ளது.

உதாரணத்துக்கு கடந்த 2007 மற்றும் 2011-ல் சோனியா லண்டனுக்கு பயணம் செய்தபோது முறையே ரூ.2.82 லட்சம் மற்றும் ரூ.35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது . இதைபோன்று சீனாவுக்கு இரண்டு முறை பயணம் மேற்க்கொண்டதில் முறையே ரூ.14 லட்சமும், ரூ.12 லட்சமும் அரசு செலவுசெய்துள்ளது தெரியவருகிறது . அதே நேரம், சோனியாவின் மருத்துவச்செலவு பற்றிய விவரங்களை ரமேஷ்சர்மா கோரவில்லை என்றார் மோடி.

ஆனால், சோனியாவின் வெளி நாட்டு பயணத்துக்கு வெறும் மூன்று லட்சம் மட்டுமே அரசு செலவு செய்திருப்பதாகவும், அவரது மருத்துவ சிகிச்சைக்காக அரசு செலவுசெய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தவறானது எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply