ராபர்ட்வதேரா மீதான , ஊழல் புகார்களை விசாரிக்க  சோனியா உத்தரவிடவேண்டும் தன் மீது கூறப்படும் , புகார்களை விசாரணை செய்ய , பா.ஜ.க தலைவர், நிதின்கட்காரி எப்படி உத்தரவிட்டாரோ, அதே போன்று , ராபர்ட் வதேராவின் மீதான புகார்களை விசாரணை செய்ய சோனியாவும் உத்தரவிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான, உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பாஜக தலைவர், நிதின் கட்காரியின் சொந்தநிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக செய்திவெளியானதும், அதுகுறித்து விசாரிக்கலாம் என்று கட்காரி அறிவித்து, முன்னு தாரணமாகத் திகழ்கிறார். அதுபோன்று காங்கிரஸ் தலைவர், சோனியாவும் திகழவேண்டும்.

அவரின் மருமகன், ராபர்ட்வதேரா மீது கூறப்படும், ஊழல் புகார்கள் குறித்து, விசாரணை மேற்கொள்ள சோனியா உத்தரவிடவேண்டும். ஏனெனில், ராபர்ட்வதேரா, அரசியலில் ஈடுபடவில்லை. தொழில்தான் செய்கிறார். அதில் இவ்வளவு, அதிகசொத்துகள் சேர்த்தது எப்படி என்று விளக்க வேண்டும்.

சோனியாவின் ஆதரவில்லாமல், வதேராவால் இவ்வளவு லாபம் அடைந்திருக்கமுடியாது. இதை முறைப்படி விசாரித்தால் தான், உண்மை வெளிவரும். கட்காரி போல, சோனியாவும், விசாரணைக்கு முன்வர வேண்டும் என்று உமாபாரதி கூறினார்.

Leave a Reply