காங்கிரஸ் கட்சியின்  தூண்டுதலால், சில செய்தி நிறுவனங்கள்  தவறான குற்றச் சாட்டுகளை பரப்புகின்றன காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலால், சில செய்தி நிறுவனங்கள் தன மீது தவறான குற்றச் சாட்டுகளை கூறி வருவதாகவும் . அவற்றை, நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றும் தொடரும் முறை கேடுகளால், காங்கிரசின் முகம் கறுத்துப்போயுள்ளது என்றும் பாஜக தலைவர் நிதின்கட்காரி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது; 2ஆங்கில தொலைக்காட்சி சேனல்களும், ஒரு ஆங்கில பத்திரிகையும் என்மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றன. அவை, காங்கிரசின் ஏஜன்டுகளை போன்று செயல்படுகின்றன.இதன்பின்னணியில், காங்கிரஸ்சின் சதித் திட்டம் உள்ளது. கட்சித்தலைவர் பதவியை நானாக கேட்டுப்பெறவில்லை; இந்த பொறுப்பிலேயே தொடர்ந்து நீடிக்கவேண்டும் என விரும்பவில்லை. ஒருபெரிய மீடியா நிறுவனம், லண்டனில் பதுக்கியிருந்த கறுப்புபணத்தை, மொரீஷியஸ் தீவு வழியாக கொண்டு வந்திருக்கிறது . 10 ரூபாய் மதிப்புள்ள பங்கை, 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளது. அதற்க்கான, அனைத்து_ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. என் மீது வேண்டு மென்றே, தேவையற்ற முறைகேடு புகார்களை கூறிவரும், மீடியாக்கள் மீது, சட்டப்படி நடவடிக்கைஎடுப்பேன். அந்நிறுவனங்களை, நீதிமன்றத்தில் சந்திப்பேன்.

நான் புர்தி நிறுவன தலைவரில்லை; அந்தநிறுவனத்தில், ஒருலட்ச ரூபாய் அளவுக்குதான் பங்குகளை வைத்துள்ளேன். எனக்கு இப்போது, எந்தவருமானமும் இல்லாத நிலையில், என் மீது வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது. ஆளும் காங்கிரஸ்_அரசு, 4.38 லட்சம் கோடி ரூ முறை கேட்டில் தொடர்பு கொண்டுள்ளது. நிலக்கரி சுரங்க_ஒதுக்கீடு, காமன்வெல்த் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு என்று காங்கிரசின், ஊழல்கணக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது. காங்கிரஸ் தலைவர், சோனியா மருமகன் ராபர்ட் வதேராவின் மீது 400 கோடி முறை கேடுகள் கூறப்படுகின்றன. தொடரும் முறை கேடுகளால், காங்கிரசின் முகம் கறுத்துப்போயுள்ளது. என்று நிதின் கட்காரி கூறினார்.

Tags:

Leave a Reply