மோடியே பிரதமர் வேட்பாளர்களில் மிகதகுதியானவர் குஜராத் மாநில் முதல்வர் மோடியே, பிரதமர் வேட்பாளர்களில் மிகதகுதியானவர் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

தான் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நினைத்து விட

வேண்டாம். இருப்பினும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியை எவர் தோற்கடிக்க முன் வந்தாலும், அவருக்கு நான்ஆதரவு வழங்க தயாராகவே உள்ளேன் . ‘ராம் லீலா மைதானத்தில் இடம் பெற்ற போராட்டத்தின்போது இதையே வலியுறுத்தி இருந்தேன். நாம் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுப் போம். இதை குஜராத்தில் இருந்து தொடங்குவோம் என்று கூறியிருந்தேன். என்னை பொருத்த வரை காங்கிரஸ் என்பது ஒரு புற்று நோய், இந்த நாட்டின் ஆட்சியிலிருந்து காங்கிரஸை விலக்குவதற்க்கு ஒவ்வொருவரும் போராடவேண்டும் என்றார்.

Leave a Reply