சட்டீஸ்கர் உருவாக்கப்பட்டதன் 12-ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு ராய்ப்பூரில் நடந்த விழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார் .

அவர் பேசியதாவது:- இந்தியாவில் இரண்டு துருவங்களாக அரசியல் பிரிந்துள்ளன. இதில் ஒருபிரிவினர் ஓட்டுவங்கி அரசியலில் ஈடுபடுகின்றனர். மற்றொரு பிரிவினரோ நாட்டின் முன்னேற்றத்தை குறிக்கோளாக கொண்டு உழைக்கின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியை முதல் பிரிவுக்கு உதாரணமாகவும் , பா.ஜ.க.வை இரண்டாவது பிரிவுக்கு உதாரணமாகவும் கூறலாம்.

இந்தியாவை காங்கிரஸ் கட்சி தான் அதிகமாக ஆண்டு வருகிறது. ஆனால், மக்களினுடைய வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரசின் பொய்யான வாக்குறுதிகளை தற்போதைய இளைஞர்கள் யாரும் நம்புவதில்லை. சட்டீஸ்கர், குஜராத் போன்ற பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. இந்த மாநிலங்களின் வளர்ச்சியைவைத்து இதனை புரிந்து கொள்ளலாம் என்றார்.

Leave a Reply