பத்திரிகையாளரை கொலைசெய்ய திட்டமிட்ட தீவிரவாதி கைது பத்திரிகையாளர் ஒருவரை கொலைசெய்ய திட்டமிட்டிருந்த, ஒரு தீவிரவாதியை பெங்களூருவில் காவல்துறை கைது செய்துள்ளது . சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு, ஐதராபாத் , ஹூப்ளி உள்ளிட்ட நகரங்களில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புவைத்திருந்த, 14 பயங்கரவாதிகள் கைதுசெய்யபட்டனர்.

கைதானவர்களில் ஒருவரான ஜோயித் அஹமதுமிர்ஜி எனும் தீவிரவாதி கொடுத்த தகவலின்படி, பெங்களூரு ஜெக ஜீவன்ராம் நகரைசேர்ந்த சையத் தம்ஜித் அஹமது 23, என்பவரை, காவல்துறையினர் தேடிவந்தனர்.இந்த நிலையில், கடந்த, 4ம் தேதி வசந்த நகர் பகுதியில், சையத்தை காவல்துறையினர் கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பெங்களூருவைசேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரை கொலைசெய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

Leave a Reply