பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரியுடன் தொடர்புடைய ‘புர்த்தி சுகர் அண்ட்பவர் மின்சார’ நிறுவனத்தில் செய்யப்பட்டமுதலீடுகள் குறித்த ஆவணங்களை_விரிவாக ஆய்வுசெய்த பிரபல கணக்கு தணிக்கையாளர் குருமூர்த்தி, பாரதிய ஜனதா உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆய்வு விவரத்தை தாக்கல்செய்தார்.

இரண்டு மணிநேரம் நடந்த கூட்டத்திற்கு பிறகு , கட்சித் தலைவர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி இருவரும் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், சட்ட ரீதியாகவோ அல்லது தார்மீக ரீதியாகவே நிதின்கட்காரி எந்த தவறையும் செய்யவில்லை ஆய்வு முடிவை கட்சி ஏற்றுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்காரியின் தலைமையின்மீது முழுநம்பிக்கை இருப்பதாகவும், கட்சித் தலைவர்கள் இந்த விவகாரத்தில் பகிரங்கமாக எந்தகருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என அந்த செய்திக்குறிப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

Tags:

Leave a Reply