சி.பி.ஐ.,  சி.வி.சி.அரசின் கைப்பாவைகளாக செயல் படுகின்றன; வினோத் ராய்  சி.பி.ஐ., மற்றும் ஊழல் கண்காணிப்பு அமைப்புகள அரசின் கைப்பாவைகளாக செயல் படுகின்றன , அவைகளுக்கு அரசியல் அமைப்பு சட்டஅந்தஸ்து வழங்கவேண்டும். என, சி.ஏ.ஜி.யின் தலைமை அதிகாரி வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

குர்கானில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியதாவது: தலைமைகணக்கு தணிக்கை அமைப்பு, அரசியல் அமைப்பு சட்டப்படி உருவாக்கப்பட்டது. எனவேதான், அந்த அமைப்பு , சுதந்திரமாக செயல்படுகிறது. ஆனால், சி.பி.ஐ., சி.வி.சி. போன்றவை சுதந்திரமான அமைப்புகள்அல்ல; இதனால்தான், அந்த அமைப்புகள், அரசின் கைப் பாவைகளாக செயல் படுகின்றன என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர் சி.பி.ஐ., மற்றும் சி.வி.சி., போன்றவை சிறப்பாக செயல்பட்டு அவற்றை ஏற்படுத்தியதற்கான உண்மையான குறிக்கோள்களை அடைய வேண்டும் என்று நினைத்தால், அந்த அமைப்புகளுக்கு, அரசியல் அமைப்பு சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும் இவ்வாறு, சி.ஏ.ஜி., தலைமை அதிகாரி, வினோத் ராய் கூறினார்.

Tags:

Leave a Reply