ஆன்மீகம் கலந்த அரசியல்_வந்தால் மட்டுமே ராம ராஜ்யத்தை அமைக்க முடியும். ராம ராஜ்யம் அமைய நாம் ஒன்றுதிரண்டு பாடுபட வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்டிரிய சேவிகா சமிதி பாரத தலைவி சாந்தகுமாரி தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் பேசியதாவது;- பாரத தேசத்தின் வளர்ச்சி அதன் சக்திசொருபமான பெண்களின் கையில்தான் உள்ளது. ஆகவேதான் இந்நாட்டை தாய்நாடு என அழைக்கிறோம் . எந்த ஒரு விஷயத்திலுமே தாய்மையை முன்னிறுத்தி தாய்மையை_போற்றுவதே நமது பாரத பண்பாடகும். சுவாமி விவேகானந்தர் கூறியதை போன்று சீதாவை நினைத்து வணங்கி, போற்று வது வரை நமது பாரத பண்பாடு கலாச்சாரம் நிலைத்திருக்கும் . எனவே நாம் ஒவ் வொருவரும் சீதையாக மாற வேண்டும். நம் நாடு பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. ஒருபக்கம் காஷ்மீர் பரச்சனை, மறு பக்கம் பங்காளதேஷ் ஊடுருவல், விலைவாசி உயர்வு , லஞ்ச, ஊழல் என்று பல பல விஷயங்களை சந்தித்துகொண்டு இருக்கிறோம். இதனை நாம் வெற்றிகொள்ள வேண்டும். அதற்கு ஒற்றுமையும், தேசத்தின் மீது பற்றும்வேண்டும். நாம் தினமும் அதி காலையில் எழுந்து யோகாசனம், சூரியநமஸ்காரம், பராணாயமம் என்று பல பயிற்சிகளை செய்யவேண்டும். நாடெங்கும் விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதா சகஸ்ர நாமம் ஒலிக்கவேண்டும். ஆன்மீகம் நிறைந்த அரசியல் வந்தால்மட்டுமே ராம ராஜ்யம் ஆகமுடியும். அதற்காக ராமராஜ்யம் அமைய நாம் ஒன்றுதிரண்டு பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:

Leave a Reply