சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை  பாராளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்ப்போம் ;  பா.ஜ.க   சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின்முடிவை பாராளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்ப்போம் என பா.ஜ.க திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது .

இது குறித்து பா.ஜ.க செய்திதொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்

செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- சில்லறை வணிகத்தில் நேரடி_அன்னிய முதலீட்டை நாங்கள் எதிர்க்கிறோம். இதுதொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இதர கட்சிகளுடனும் ஆலோசித்து ஒரு யுக்தியை வகுப்போம். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அரசின்முடிவை கடுமையாக எதிர்ப்போம். இந்த முடிவு நாட்டுமக்களின் நலன்களுக்கு எதிரானது. எனவே இது குறித்து அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து ஒருயுக்தி வகுக்கப்படும் என்றார்

Tags:

Leave a Reply