பால்தாக்கரே மறைவுக்கு பாஜக தலைவர்கள் இரங்கல் பால்தாக்கரே மறைவுக்கு பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் .

இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்ததாவது : தாக்கரே மறைவால், இந்திய அரசியலில் உருவாகியுள்ள

வெற்றிடத்தை இனி நிரப்புவது கடினம். மிகச்சிறந்த பண்புகளை கொண்டவராகவும், விசுவாசமான தேச பக்தராகவும் விளங்கியவர் அவர் என்றார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி: மிகச்சிறந்த தேச பக்தர். என் மீது, தனிப்பட்ட முறையில், மிகுந்தபாசம் வைத்திருந்தவர். அவரது மறைவால், அரசியலுக்கு பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. என்றார்

ஷா நவாஸ் ஹூசைன் , பால் தாக்கரே, புலி போல வாழ்ந்தவர், இந்திய அரசியலில் அவர் ஒரு முக்கிய தலைவர். அரசியலில் மூத்த தலை வர்களில் அவர் ஒருவர். அவரது மரணத்துக்கு பாரதிய ஜனதா இரங்கலை தெரிவித்து கொள்கிறது என்று கூறினார்.

Tags:

Leave a Reply