கசாப் தூக்கிலிடப்பட்டதை  பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரேஒரு பயங்கரவாதியான அஜ்மல்கசாப், புணே எரவாடா சிறையில் புதன் கிழமை ரகசியமாக தூக்கிலிடப்பட்டார்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் உள்ள தாஜ்ஹோட்டல் உள்பட பல் வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் கள் நடத்தப்பட்டதில் 166பேர் பலியாகினர். இந்த_தாக்குதல்களை நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் அஜ்மல்கசாப் மட்டும்தான் உயிருடன் சிக்கினான்.

பாகிஸ்தான் தீவிரவாதியான கசாபுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி அவனது கருணை மனுவை நிராகரித்ததை யடுத்து அவன் இன்று காலை 7.30 மணிக்கு ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப் பட்டான். அவனை தூக்கிலிட கடந்த 8ம் தேதியே முடிவுசெய்யப்பட்ட போதிலும் அந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அவரது உடலை பெற்றுக்கொள்ள பாகிஷ்தான் அரசு மற்றும் அவரது உறவினர்கள் முன்வராததால் . சிறை வளாகத்திலேயே கசாப் உடல் புதைக்கபபட்டது.

சுதந்திர இந்தியாவில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. கசாப் தூக்கிலிடப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.கசாபின் தூக்கு தண்டனை , போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும விதமாக அமைந்துள்ளது

முன்னதாக, மும்பை ஆர்தர்சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கசாப் நவம்பர் 19ஆம் தேதி புணே எரவாடா_சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான் .

இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் உஜ்வல்நிகம் கூறுகையில், “”கசாப் தூக்கிலிட ப்பட்டது நாட்டுக்கு கிடைத்த வெற்றி” என்றார்.

காசாப் சிறையில் இருந்த கால கட்டத்தில் பாதுகாப்புக்காக இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையினர் 250 பேர், சிறைவளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். இப்போது அந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

Leave a Reply