மணி  சங்கர அய்யர் மீது மாநிலங்களவையில்   பாஜக உரிமை மீறல் நோட்டீஸ நாடாளுமன்ற உறுப்பினர்ளை விலங்குகளுடன் ஒப்பிட்டுக் கருத்துதெரிவித்ததற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர்மீது மாநிலங்களவையில் நடத்தை விதிகளின்கீழ், பாஜக உரிமை மீறல் நோட்டீஸ் தந்துள்ளது.

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவது குறித்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றுப்பேசிய மணி சங்கர் அய்யர், “கிணற்றுக்குள் சிக்கி கூப்பாடு போடுகிற விலங்குகளைப் ” போல எதிர்க் கட்சி எம்பி,.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர் என கூறியிருந்தார். இந்தவிவாதம் மாநிலங்களவையில் கடும்அமளியை ஏற்படுத்தியது. அவர் மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக ,பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, இடது சாரிக் கட்சிகள் வலியுறுத்தின.

இதைத்தொடர்ந்து பாஜக ,.வைச் சேர்ந்த ஜகத்பிரகாஷ், தர்மேந்திர பிரதான், புபேந்திர யாதவ் உள்ளிட்ட எம்.பி.,க்கள் கூட்டாக இதற்கானநோட்டீசை மாநிலங்களவை முதன்மை செயலாளரிடம் வழங்கினர்.

Leave a Reply