பாகிஸ்தானில் ஸ்ரீராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு  ராம. கோபாலன் கடும் கண்டனம் பாகிஸ்தானில் உள்ள ஸ்ரீராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அரசின் வாலை ஒட்டநறுக்க ஐ.மு.கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலை நீதிமன்ற உத்தரவையும்மீறி அங்குள்ள அரசாங்க அதிகாரிகள் இடித்துள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

பாகிஸ்தான் என்றபகுதி இஸ்லாமிய வன்முறைக்குப் பணிந்து பாரதத்தின் அன்றைய தலைவர்கள் பிரித்துக்கொடுத்தது. அதன் விளைவாக அங்குள்ள இந்துக்கள் சொல் லொணா துயரங்களை அனுபவித் து வருகிறார்கள். இதற்கெல்லாம் நாமும் பொறுப்பாகிறோம் என்பதை பாரத அரசாங்கம் உணரவேண்டும்.

பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் கட்டாயமாக மத மாற்றப்படுவதும், இந்துப் பெண்கள் மானபங்கப் படுத்தப்படுவதும், கடத்தப்பட்டு முஸ்லீம்களாக மத மாற்றப்படுவதும் தன்மானமுள்ள எந்த மனிதனையும் நெஞ்சுருகச்செய்துவிடும்.

பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான இந்துக்கோயில்கள் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. அங்குள்ள இந்துக்கள் ஜனத் தொகை வெகுவாக குறைந்துவிட்டது. இந்துக்களின் சொத்துகள் சூறையாடப் படுகின்றன, வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம்பறிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்துக்களாக வாழ்வதற்கு அங்கு இஸ்லாமிய அடிப்படை வாதிகளிடம் (வரி) பணம் கொடுக்கவேண்டிய நிலை உள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் அரசாங்கம் ரௌடித் தனமான அரசாங்கம், அங்கு சட்டம் ஒழுங்கிற்கோ, நீதிக்கோ வழியில்லாத காட்டு மிராண்டித் தனமான செயல்பாடே அதன்வெளிப்பாடாக உள்ளது.

இது வெளிநாட்டுப் பிரச்சனை என மத்திய அரசு ஒதுங்கிக்கொள்ள முடியாது. பாகிஸ்தானை வெளி நாடாக உருவாக்கியதே நாம்தான். அன்றிலிருந்தே பாரதத்திற்கும், அங்குள்ள இந்துக்களுக்கும் தொடர்ந்து தலைவலியை கொடுப்பதே பாகிஸ்தான் அரசாங்கத்தின் தலையாயப்பணியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானில் நடை பெறும் இத்தகைய கொடூரச்செயல்களை ஐநா சபைக்கும், மற்ற உலகநாடுகளின் கவனத்திற்கும் கொண்டுசென்று பாகிஸ்தானின் வாலாட்டத்தை ஒடுக்க பாரத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்குள்ள இந்துக்கள் தன்மானத் தோடு வாழ வழிகாண வேண்டியது நமது அரசாங்கத்தின் கடமை. கராச்சியில் இடிக்கப்பட்ட ஸ்ரீராமர் கோயிலை கட்டித்தரவும், அங்கு வாழும்மக்கள் பாதுகாப்பாக வாழவும் பாகிஸ்தான் அரசை நிர்பந்திக்கவேண்டும். மத்திய அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுக்கவைத்து அங்குள்ள இந்துக்களுக்கு பாதுகாப்பும், சுய மரியாதையும் ஏற்படுத்தித்தர வேண்டியது நமது பொறுப்பு என்பதைப் பாரதத்தில்வாழும் அனைவரும் உணர்ந்து செயல்பட இந்து முன்னணி வலியுறுத்துகிறது என அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply