மோடிக்கு ஆதரவு திரட்ட  குஜராத்தில் தமிழக பா.ஜ.க  குழு குஜராத் மாநில சட்ட சபை தேர்தலில் தமிழர்கள்வாழும் பகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்மேற்கொள்ள தமிழக பா.ஜ.க குழுவினர் அங்குசென்றுள்ளனர்.

இதில் தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்ட 20பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் குஜராத்தில் நரேந்திரமோடி போட்டியிடும் மணிநகர் தொகுதி உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அகமதாபாத்தில் இன்றைய பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்.

Leave a Reply