முதல்வர் வேட்ப்பாளரை   அறிவிக்க காங்கிரஷ்க்கு  துணிச்சல் இல்லை குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரை சோனியா காந்தி இன்னும் ஏன் அறிவிக்கவில்லை என்று நரேந்திர‌ மோடி கேள்வியெழுப்பியுள்ளார்

மகாரா பூராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் நரேந்திர

மோடி பேசியதாவது: குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி குழம்பிப் போயுள்ளது. ‌இன்னும் முதல்வர்வேட்பாளர் யார் என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. அறிவிப்பதற்கு அவர்களுக்கு இன்னும் துணிச்சல் இல்லை. கடந்த அக்டோபர் மாதம் இந்த மாநிலத்தில் சோனியாதான் முதன் முதலாக பிரசாரத்தை தொடங்கி வைக்கவந்தார். தற்போது தோல்விபயம் காரணமாக சோனியா, ராகுல் ஆகியோர் பிரசாரம்செய்ய வர தயங்குகின்றனர். மத்தியில் ஆட்சியிலிருந்து கொண்டு அரசு கஜானாவ‌ை கொள்ளையடித்தனர். அதேபோன்று குஜராத்திலும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து இந்த மாநில அரசின் காஜனாவையும் சுருட்டமுயற்சிக்கிறது காங்கிரஸ் என்று மோடி பேசினார்.

Leave a Reply