எழுதி கொடுப்பதை அப்படியே வாசிக்கும் பழக்கத்தை சோனியா கைவிட வேண்டும் குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல்கட்டமாக 87 தொகுதிகளில் கடந்த 13ம் தேதி வாக்கு பதிவு அமைதியாக நடந்துமுடிந்தது. இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் 95 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடை பெறுகிறது. இதனை தொடர்ந்து

பாஜக தலைவர்கள் குஜராத்தில் பல இடங்களில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார்.

மஞ்சள்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் யோகேஷ் பட்டேலை ஆதரித்து மேனகா காந்தி பேசியதாவது:

தேர்தல் பிரச்சாரத்தின்போது மற்றவர்கள் எழுதிகொடுப்பதை அப்படியே வாசிக்கும் பழக்கத்தை சோனியா கைவிடவேண்டும். இந்தியாவில் இருந்து ஆங்கிலம் தெரியாதபலர் வெளிநாடுகளுக்கு சென்றவுடன் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்தியா வந்து பல ஆண்டுகள் ஆகியும்கூட இன்னும் ஒருவர் இந்தியை முழுமையாக கற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.

நரேந்திர மோடியை சிறந்த மார்க்கெட்டிங் மேலாளர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நல்ல பொருட்களைதான் சிறப்பாக மார்க்கெட் செய்யமுடியும். மோசமாக பொருட்களை மார்க்கெட் செய்யமுடியாது என்பதை ராகுல் புரிந்துகொள்ள வேண்டும். நரேந்திர மோடிக்கு தேசிய அளவிலும் சிறப்பாக செயல்பட கூடிய திறமை உண்டு என்று கூறினார்.

Leave a Reply