தங்க நாற்கறத்தின் நாயகன் பாஜக.,வின் பெருமை மிகு அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நாட்டின் முன்னேற்றத்துக்காக பல நல்ல திட்டங்கள் தீட்டப் பட்டது. காங்கிரஸ் கட்சி சுமார் 10 வருடம் நீங்கலாக இந்தநாட்டை நீண்ட காலமாக ஆண்டு வந்தது. அதே காங்கிரஸ் அன்று மக்களிடம் என்ன சொல்லி வோட்டு கேட்டதோ அதையே இன்றும்சொல்லி வோட்டு கேட்பது வெட்கக்

கேடான ஒன்று. ஆனால் குறுகிய வருட காலமே ஆட்சிபுரிந்த வாஜ்பாய் நீண்டகால நாட்டு நலனையே கருத்திற் கொண்டு சிறப்பான ஆட்சிபுரிந்தார்.

அவர்களுடை திட்டங்கள் ஒவ்வொன்றும் தொலைநோக்கு கொண்டது. வோட்டிற்க்காக குறுகிய கால திட்டங்களை தீட்டாமல் தொலைநோக்கு திட்டங்களை தீட்டினார் வாஜ்பாய் அவர்கள். அதில் மிகமுக்கியமானவை இரண்டு. ஒன்று வாஜ்பாய்யின் கனவுத் திட்டமான தங்கநாற்கற சாலை. இன்று மக்கள் பெரு மளவில் இந்த திட்டத்தினால் பயன் பெறுகின்றனர் என்று சொன்னால் அந்தபெருமை பாஜக.,வையும் , வாஜ்பாய் அவர்களையுமே சேரும் . ஆனால் அந்ததிட்டத்தை முடக்கி மிகபின்தங்கிய நிலையில் செயல்பட வைத்துள்ளனர் காங்கிரசார். இதில் இருந்தே அவர்களுக்கு நாடுமுக்கியமில்லை. தங்களது பாக்கெட்டும், பதவியும்தான் முக்கியம் என நிரூபித்துவிட்டனர்.

அடுத்து இன்னொன்று நதிநீர் இணைப்பு. நாட்டிலே இருக்கும் நீர் பிரச்சனையை தீர்த்து பாரதத்தை பசுமைபூமியாக்க கனவுகண்டவர் வாஜ்பாய். அவரது பெருமுயற்சியால் பலநிபுணர்களை வைத்து நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்வடிவம் தர இருந்தபோது துரதிருஷ்டவசமாக பாஜக ஆட்சியை இழந்தது. நாட்டிற்கு இது போராதகாலம் என்றே சொல்லவேண்டும். அடுத்து வந்த சோனியா காங்கிரஸ் நாட்டு நலனில் அக்கறை இல்லாமல்  தங்க நாற்கறத்தின் நாயகன் ஊழலில் திளைப்பதையே சாதனை யாக்கி வருகின்றனர். இது குறித்த வழக்கு உச்ச  நீதிமன்றத்தில் இருக்கிறது . இந்த வழக்கு 09/01/2012 அன்று விசாரணைக்கு வந்தது.
நதி நீர் இணைப்பு குறித்து மத்திய அரசு சார்பில் இது வரை நடந்திருக்கும் பணிகள்தொடர்பான அறிக்கையை தரும்படி நீதிமன்றத்துக்கு உதவும் வழக்குரை ஞரிடம் உச்சநீதிமன்றம் கேட்டது.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டு வந்த நதி நீர் இணைப்புத்திட்டம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்எச்.கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்டகுழு விசாரித்து வருகிறது.

இந்தவழக்கு விசாரணைக்கு வந்த போது, நதி நீர் இணைப்பு தொடர்பாக நடந்திருக்கும் பணிகள்குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை தரும்படி இந்தவழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் வழக்குரைஞர் ரஞ்சித்குமாருக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர். நதி நீர் இணைப்பு தொடர்பாக ஆய்வுசெய்வதற்காக 2002-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நடவடிக்கை குழுவை அமைத்தார். அந்தக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், இமயமலை பகுதி, தீபகற்ப பகுதி என்று இரண்டு பிரிவாக திட்டத்தை செயல் படுத்த பரிந்துரைத்திருந்தது. தீபகற்பப் பகுதியில் கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி, காவிரி, வைகை உள்ளிட்ட 16 நதிகளை இணைப்பது என்று திட்டமிடப் பட்டது. கேரளம், கர்நாடகத்தில் மேற்கு நோக்கிப்பாயும் ஆறுகளின் வழித்  தடத்தை மாற்றுவது, மேற்கு கடற்கரை யோரம் பாயும் சிற்றாறுகளை இணைப்பது போன்றவையும் இந்த திட்டத்தில் அடங்கும்.

இமயமலைப்பகுதியில் பிரம்மபுத்திரா, கங்கை, அவற்றின் கிளை நதிகள் ஆகியவற்றின் குறுக்கே நீர் தேக்கங்களை அமைத்து பாசனத்துக்கும், மின் சாரம் தயாரிக்கவும் பயன் படுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இதன்மூலம் மழைக் காலங்களில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கை தடுக்கலாம் என்றும் யோசனைகூறப்பட்டது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்து வதன் மூலம் 2050-ம் ஆண்டில் நாட்டின் பாசனப்பரப்பை 16 கோடி ஹெக்டேராக உயர்த்தமுடியும். ரூ.5 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்தின் படி, வரும் 2016-ம் ஆண்டுக்குள் முக்கியஆறுகள் இணைக்கப்பட வேண்டும் என்பது இலக்காகும். ஆனால், இதுவரைக்கும் எந்த பணியையும் இந்த காங்கிரஸ் அரசு தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நாட்டின் முன்னேற்றத்திற்க்காக காங்கிரசார் என்றைக்குமே பாடுபட்டதில்லை என்பது சரித்திரம் . பாரதிய ஜனதாக் கட்சிக்கும் வாஜ்பாயிக்கும் இந்ததிட்டத்தை செயல்படுத்தினால் பெயர் வந்துவிடும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்க்கான ஏதாவது சாக்குபோக்கை காங்கிரஸ் அரசு நீதி மன்றத்தில் கூறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒருஅருமையான திட்டத்தை வீழ்த்திய பெருமை சோனியா காங்கிரசை தவிர வேறு யாருக்கும் இல்லை.

Leave a Reply