ஆர்எஸ்எஸ்., பயிற்சி முகாம் வளாகத்துக்குள் அத்து மீறி  நுழைந்து, தாக்கிய நான்கு பேர் கைது பந்தலூர் அருகே, ஆர்எஸ்எஸ்., பயிற்சி முகாம் வளாகத்துக்குள் அத்து மீறி நுழைந்து, தாக்கியதாக, நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மண்டல அளவிலான, ஆர்எஸ்எஸ்., அமைப்பின்

பயிற்சிமுகாம், நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்த, அய்யன் கொல்லி பள்ளிவளாகத்தில், கடந்த 23ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு, 11:00 மணியளவில், முகாம்வளாகத்துக்குள், ஜீப் ஒன்றில் வந்த சிலர், தடுப்பைசேதப்படுத்தி நுழைந்துள்ளனர். அது குறித்து கேட்ட, ஆர்எஸ்எஸ்., மாவட்ட அமைப்பாளர் சரவணனை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர் மற்றும் முகாம் பொறுப் பாளர்களை, தகாத வார்த்தைகளினால் திட்டியதாக கூறப்படுகிறது.

\இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார்செய்யப்பட்டது. தகராறில் ஈடுபட்டதாக, அய்யன்கொல்லி தட்டாம்பாறையை சேர்ந்த டிரைவர் மைக்கேல், சதீஷ்குமார், ஜான்சுந்தர், பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்; ஜீப் பறிமுதல் செய்யபபட்டது. முகாம் நடைபெறும் இடத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply