தேசிய பயங்கரவாத தடுப்புமையம் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு   விரோதமானது தேசிய பயங்கரவாத தடுப்புமையம் அமைப்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இதை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை சேர்ந்த சில முதல்வர்களே பயங்கரவாத தடுப்புமையம் அமைக்க எதிர்க்கின்றனர்என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமருக்கு கடிதம்வாயிலாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களில் தேசிய பயங்கரவாத தடுப்புமையம் அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது சரியல்ல. அப்படி அமைப்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளை விக்கும். தேசிய பாது காப்பிற்கு மத்திய அரசு உத்தரவாதம் வழங்கிய பின்தான் பரிசீலிக்க வேண்டும்.

இங்கே சிலமாநிலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளது . அவற்றை கூடுமானவரை மாநில அரசுகளே எதிர்த்து போராடிவருகின்றன. மேலும் காங்கிரஸ் ஆட்சியல்லாத மாநில முதல்வர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை சேர்ந்த சில முதல்வர்களே பயங்கரவாத தடுப்புமையம் அமைக்க எதிர்க்கின்றனர். எனவே மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் .இதற்காக மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையினை கைவிடவேண்டும். என்று அந்த கடிதத்தில் ‌மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply