மெக்சிக்கோவில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருந்து, "டிரக்-லோட்" அதாவது போதை வஸ்த்து கடத்தலின் கடவுள் என்று கூறப்படும் ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார். இவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலரை அவரது சகாக்கள் செலவு செய்துள்ளார்கள். 50 மில்லியன் டாலரா என்று வாயைப் பிளக்கவேண்டாம்.அது எல்லாம் இவருக்கு ஒரு சுஜூ ஜூப்பி காசு என்கிறார்கள். இவர் எவ்வாறு தப்பினார் என்ற ரகசிய தகவலை அதிர்வு இணைய வாசகர்களுக்காக மொழிபெயர்த்து இருக்கிறோம் .


உலகில் உள்ள மிகவும் புத்திசாலி எஞ்சினியர்கள் ,நிலத்தை அகழ்பவர்கள் , கட்டடம் கட்டுபவர்கள் , என்று பல தொழில் நுட்ப்ப வல்லுனர்கள் பாவிக்கப்பட்டு உள்ளார்கள். ஏதோ நாசா விண்வெளிக்கு விண் கலத்தை அனுப்ப திட்டம் தீட்டுவதை விட கடினமான திட்டத்தை தீட்டியுள்ளார்கள் இவர்கள். முதலில் சிறைச்சாலையான "அல்டிபிளானோ" வுக்கு 1 மைல் தொலைவில் உள்ள ஒரு நிலத்தை வாங்கிய சிலர் , அங்கே ஒரு கட்டடம் கட்டுவதாக திட்டத்தைப் போட்டார்கள். அதற்கு அரசாங்கத்திடம் இருந்து முறையாக பர்மீஷனும் வாங்கப்பட்டது. அங்கே இருந்து தான் எவரும் சந்தேகப்படாத வகையில் அவர்கள், ஒரு குகை(சுரங்கப் பாதையை) அடியால் கிண்ட ஆரம்பித்துள்ளார்கள். சுமார் 3,250 தொன் எடையுள்ள மண்ணை அவர்கள் அகழ்ந்து வெளியே எடுத்துக் கொட்டியுள்ளார்கள். அதில் கூட எவருக்கும் சந்தேகம் வரவில்லை.


நிலத்திற்கு அடியில் இவர்கள் சுரங்கத்தை கிண்டிக்கொண்டு , சிறைச்சாலையின் கீழ் சென்று. அங்கே உள்ள குளிக்கும் அறையின் அடியில் கொண்டுபோய் அதனை முடித்துள்ளார்கள். குளிக்கும் அறையில் கீழ் சுமார் 23 அடி ஆளத்தில் அந்த சுரங்கம் இருந்துள்ளது. அதாவது தாம் வாங்கிய நிலப்பரப்பில் இருந்து , சிறைச்சாலை வரை சுரங்கத்தை அவர்கள் கிண்டி இருந்தாலும், சிறைச்சாலைக்கு உள்ளே கிண்ட ஆரம்பிக்கும் வேளை நிலத்திற்கு அடியில் நிச்சயம் சத்தம் கேட்க்கும். இதனால் காவலாளிகளில் எவராவது உஷார் ஆகிவிடலாம். இதனால் அவர்கள் மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியில் மெதுவாக ஓசை படாமல் , தோண்ட ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு ஒரு சில சிறை காவலாளிகளும் உடந்தையாக இருந்துள்ளார்கள்.


அவர்களுக்கு ஏதோ நடக்க இருக்கிறது என்பது மட்டும் தான் தெரியும். பிளான் இப்படி போகிறது என்று தெரியவில்லை. இது இப்படி இருக்க சுரங்கப் பாதையில் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றை இறக்கி , அதன் பின்னால் ஒரு சக்கர வண்டியைக் கட்டி , அதில் தான் அகழ்ந்த மண்ணை கட்டி இழுத்து வந்து வெளியே கொட்டியுள்ளார்கள். அது போக இந்த 1 மைல் நீளமான சுரங்கப் பாதையில் , ஆக்சிஜன் குழாய்கள் கூட பொருத்தியுள்ளார்கள். இறுதியாக சிறைச்சாலையில் உள்ள குளியல் அறைக்கு கீழ் தோண்டப்பட்டு, ஒரு ஓட்டையைப் போட்டு அதனை பின்னர் மணலால் மூடியுள்ளார்கள். எந்த திசையில் கிண்ட வேண்டும். அது எங்கே வரை செல்கிறது , என்பது எல்லாம் துல்லியமாக அளக்கப்பட்டு வரை படம் போடப்பட்டுள்ளது. இதன் பின்னரே சிறையில் இருந்த குற்றவாளி ஈ.ஐ. சப்போஸ் அதனூடாக தப்பியுள்ளார்.


கடந்த சனிக்கிழமை இவர் குறித்த குளியலறையினூடாக, உள்ளே இருந்த சுரங்கப் பாதையில் இறங்கி அங்கே தயார் நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டுவேகமாகச் சென்று அந்த கட்டடம் கட்டும் இடத்திற்குச் செல்ல , அங்கே அவர் வருகைக்காக காத்திருந்த சிலர் அவரை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும்அங்கே இருந்து வெளியேற்றியுள்ளார்கள். குறித்த பகுதியை சல்லடை போட்டு தேடிவரும் மெக்சிக்கோ அதிரடிப்படையினர் , இச்செயலை பார்த்து வியந்துபோய் விட்டார்கள். இனி எந்தக் காலத்திலும் சாப்போசை தேடிக் கண்டு பிடிக்கவே முடியாது என்கிறார்கள் பொலிசார். அவர் நிச்சயம் பாதுகாப்பாக வேறு ஒரு நாட்டுக்கு தனி விமானம் மூலம் அல்லது கப்பலில் சென்றுவிடுவார் என்று கூறப்படுகிறது.


அவரது போதை வஸ்த்து கடத்தல் வலைப் பின்னல் இதுவரை , செயப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அவரை கைதுசெய்து பொலிசார் அடைத்தாலும் அவரது நெட்வேர்க்கை முடக்க அவர்களால் முடியவில்லை. உலக நாடுகளுக்கு போதைப் பொருட்களை வழங்கும் முக்கிய பகுதியாக மெக்சிக்கோ உள்ளது. இங்குள்ள காடுகளில் தான் கஞ்சா தொடக்கம் அனைத்து போதைப் பொருள் பயிர்களும் விளைகிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.