வாஜ்பாய்க்கு நாட்டின் உயரிய விருதான   பாரத ரத்னா வை வழங்கவேண்டும் முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய்க்கு நாட்டின் உயரிய விருதான “பாரத ரத்னா’ வை வழங்கவேண்டும் என்று பாஜக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து , பாஜக எம்பி.யும், முன்னாள் மத்திய நிதி

அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பேராசிரியர் அரவிந்த்பனகரியா என்பவர் முன்னணி நாளிதழ் ஒன்றில் எழுதியிருக்கும் கட்டுரையை மேற்கோள்காட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு வாஜ்பாய் முக்கியபங்கு வகித்ததாக பனகரியா தனது கட்டுரையில் புகழாரம் சூட்டியிருந்தார் என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply