புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவி மயக்க மருந்து கொடுத்து  பாலியல் பலாத்காரம் புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அரசு மேல்நிலைப்

பள்ளியில் படித்துவருகிறார். இவர் தினமும் தனியார் பேருந்தில் தனிவகுப்புக்காக வந்து சென்றுள்ளார். அப்போது பேருந்து_நடத்துநர் முத்து இவருக்கு அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தோழியை பார்க்க அவர் சென்றுள்ளார் . பிறகு வீடுதிரும்பவில்லை. இதைதொடர்ந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் திருபுவனை, வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார்செய்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் அருகே அந்த மாணவியை மீட்டனர். மாணவியின் உடல் நிலை மோசமாக இருந்தநிலையில், அவரை புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்துத காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையின் போது, நான் 1-ந் தேதி வில்லியனூர் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பஸ்கண்டக்டர் முத்து குமரன் என்னிடம் உன்அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. உடனேவா என கூப்பிட்டார்.

எனவே அவருடன் நான்சென்றேன். என்னை பஸ்சில் அழைத்துசென்றார். அப்போது ஏதோ ஒருவகை பொடியை முகத்தில் வைத்தார். அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. இரவு ஒருகுடிசை வீட்டில் இருந்தேன். அங்கு கண்டக்டர் முத்து குமரன் என்னை கற்பழித்தார். இதனால் நான் பாதிமயக்கத்தில் இருந்தேன். அப்போது மேலும் ஒருவன் என்னை கற்பழித்தான். அதன் பிறகு காலையில் விழுப்புரம் பஸ்நிலையத்தில் விட்டு விட்டு சென்று விட்டனர். நான் என் பெற்றோருக்கு தகவல்கொடுத்தேன் என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply