பெண்களுக்கு அதிகாரம், மரியாதை , பாதுகாப்பு வழங்குவதும் ஆர்.எஸ்.எஸ்.சின்  சித்தாந்தம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தை பின் பற்றுவதன் விளைவாகவே பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பதாக தெரிவித்திருந்தார். இதற்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒருசில கட்சிகள் அடிப்படை காரணமே இல்லாமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் ; “”ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்துக்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்களின் மீதான தாக்குதல் , பாலியல் பலாத்காரம் எனும் இழிவான குற்றங்களை அவர் கண்டித்துள்ளார். இந்த செயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என அவர் கூறியுள்ளார்” என்றார்.

இது குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது,

“”ஆர்எஸ்எஸ். தலைவர் பாகவத்தின் சிலகருத்துக்கள் தொடர்பாக இப்போது எழுந்துள்ள சர்ச்சை தேவையற்றது. அவரது கருத்தை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும். பெண்களுக்கு உயர்கௌரவம் வழங்கும் இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பற்றியே பாகவத் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். பெண்களுக்கு அதிகாரம், மரியாதை மற்றும் பாதுகாப்பு வழங்குவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் ஆகும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply