தேசிய மக்கள் கட்சி பா.ஜ.க வுடன் கூட்டணி முன்னாள் சபாநாயகர் பிஏ. சங்மா தேசிய மக்கள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

இவர் தேசியவாத காங்கிரஸில் கட்சியுடன் இருந்த கொள்கை முரண்பாட்டின் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி தற்போது

தேசிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சியை முறைப்படி தொடங்கியுள்ளார் .

புத்தகம் இந்த கட்சியின் சின்னமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறோம் என்றும் சங்மா அறிவித்துள்ளார் . மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் தனது கட்சியை களமிறக்க தீவிரமாகியுள்ளார் .

Leave a Reply