பதவி சுகம் கண்ட காங்கிரஸ்காரர்கள் மூலம் தேசத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை 1907 சூரத் காங்கிரஸ் மாநாடு INDIAN NATIONAL CONFERENCE , INDIAN NATIONAL CONGRESS என இரண்டாக பிரிந்ததை முந்தைய பதிவுகளில் பார்த்தோம்,

திலகர் தலைமையிலான INDIAN NATIONAL CONFERENCE இல்

வ.உ.சிதம்பரம்பிள்ளை, விபின் சந்திரபால், லாலா லஜபதிராய், பாரதியார் உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர். இவர்கள் திலகர் தலைமையில் உடனடியாக சூரத் அருகில் மாநாடு ஒன்றினை நடத்தினர்.

இதில் பேசிய திலகர் "பதவி சுகம் கண்ட காங்கிரஸ்காரர்கள் மூலம் தேசத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆகவே நாம் தேச விடுதலைக்கு பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும் பாடுபடவேண்டும். இதற்காக ஒரு நால்வர் குழு ஒன்றினை தேர்ந்தெடுத்துள்ளேன். நான் வ.உ.சிதம்பரம்பிள்ளை, விபின் சந்திரபால், மற்றும் லாலா லஜபதிராய், ஆகியோர் நால்வர் குழு தலைமை பொறுப்பினை ஏற்க இருக்கிறோம்.

இதன்படி விபின் சந்திரபால் கிழக்கு பாரதத்திலும், பாலகங்காதர திலகராகிய நான் மேற்கு பாரதத்திலும், லாலா லஜபதிராய் வடக்கு பாரதத்திலும் மற்றும் வ.உ.சிதம்பரம்பிள்ளை தெற்கு பாரதத்திலும் சுதந்திரக்கனலை மக்களிடம் ஊட்டுவதற்கு பிரதிநிதிகளாக செயல்பட போகிறோம்."

இப்போது இவர்களால் நாடு முழுவதும் விடுதலை வேட்கை பற்றி எரியத் தொடங்கியது. இதனைக் கண்டு தொடை நடுங்கிய ஆங்கிலேய அரசாங்கம், இந்த நால்வரையும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து பிடித்து சிறையில் அடைத்தனர்.

இந்த நால்வரும் சிறைக்கு போகும் போது அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் "வந்தேமாதரம் பாரத்மாதா கி ஜே" என்ற கோஷத்துடன் அவர்களை வழியனுப்பி வைத்தனர்..

இவர்கள் அனைவரும் சிறைகளில் பட்ட கஷ்டங்களுக்கு எல்லையே இல்லை. இவர்கள் சிறைவாசம் அடைவதற்கு காரணாமாக இருந்த காங்கிரஸ்காரர்கள் இவர்கள் சிறைகளில் பட்ட வேதனைகள் தெரிந்தும் இவர்கள் மீது ஒரு சிறு அனுதாபம் கூட காட்டாமல் வெள்ளைக்காரர்களுக்கு சலாம் போடுவதனை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

ஆனாலும் ஆங்காங்கே வெள்ளையர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது.                                                                                     தொடரும்…..

நன்றி ; ராம்குமார்

Leave a Reply