மத மோதலை தூண்டும் வகையில் பேசிய ஓவாஸி இன்று கைது  மத மோதலை தூண்டும் வகையில் பேசி ஆந்திராவில் பெரும் பரபரப்பை உருவாக்கிய மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.வான ஓவாஸி இன்று கைதுசெய்யப்பட்டார்.

போலீசை 15 நிமிடம் அமைதியா இருக்க வைத்தால் நான் 100கோடி

இந்துக்களை முஸ்லிமாக மாற்றுவேன் அல்லது அளிப்பேன் என்ற வகையில் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ. ஓவாஸி பேசியிருந்தார். பிறகு அவர் லண்டன் சென்று விட்டார். அவரது பேச்சு பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் லண்டனிலிருந்து நேற்று ஓவாஸி ஹைதராபாத் வந்தார். போலீசாரை சந்தித்து விளக்கம் தர உத்தரவிட்டிருந்த நிலையில் தமது உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதா தட்டி கழிக்க திட்டமிட்டார் . மேலும் தம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்திலும் ஓவாஸி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply