அமெரிக்க மக்களையும், உலகநாடுகளையும் திரும்பிபார்க்க வைத்தவர் விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர்கூட பெண்களைதான் முன்னிலை படுத்துகிறார் . அமெரிக்காவின் சிகாகோ மாநாட்டில் பேசும்போது கூட சகோதரிகளே என கூறி அமெரிக்க மக்களையும், உலகநாடுகளையும் திரும்பிபார்க்க வைத்தவர் விவேகானந்தர் என தமிழக பா.ஜ.க , தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடந்துவருகிறது. “எழுமின் விழிமின்’ எனும் தலைப்பில் நடந்த முகாமை தொடங்கி வைத்து தமிழக பா.ஜ.க , தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது;

ஒருகுடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த_குடும்பம் மற்றும் அந்த தலைமுறையே படித்ததாக அர்த்தம். பெண்களுக்கு அந்தகாலத்திலேயே சுதந்திரமும், ஆட்சிசெய்யும் அதிகாரமும் இருந்தது என்று உத்திரமேரூர் கல்வெட்டுகள் எடுத்து கூறுகிறது. இந்த கல்லூரியிலும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் படிக்கின்றனர். மாணவ, மாணவிகளாகிய நீங்கள் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள், கொள்கைகள், தத்துவங்களை படித்தால் உங்கள வாழ்க்கை உயர்ந்த நிலையை அடையும்.

அவரின் கருத்துக்களை பின்பற்றினால் உங்களை எவராலும் வெல்லமுடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமு சிறந்த எடுத்துக் காட்டு ராமகிருஷ்ண பரமகம்ஷர். மாணவர்கள் தான் குருவை தேடி செல்வார்கள். ஆனால்குரு தேடிய ஒரே_சீடர், மாணவர் என்றால் அது விவேகானந்தர். அன்னை பராசக்தியே அவர் முன் தோன்றியபோது கூட, எனக்கு ஞானத்தைகொடு, துறவறத்தைகொடு என கேட்டவர் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தர்கூட பெண்களைதான் முன்னிலை படுத்துகிறார். அமெரிக்காவின் சிகாகோ மாநாட்டில் பேசும்போது கூட சகோதரிகளே என கூறி அமெரிக்க மக்களையும், உலகநாடுகளையும் திரும்பிபார்க்க வைத்தவர் சுவாமி விவேகானந்தர். இவ்வாறு அவர்பேசினார்.

Leave a Reply