சத்தீஸ்கரில்   இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரின் காங்கர் மாவட்டம் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் மிகுந்த

பகுதியாகும். அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறையும் எல்லை பாதுகாப்பு படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள ஒருகிராமத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக செய்தி வெளியானதை தொடர்ந்து அந்த கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பெண் நக்சலைட்டுகள் இறந்தனர். மற்ற நக்சலைட்டுகள் தப்பிஓடிவிட்டனர். பத்து நக்சலைட்டுகள் காயமடைந்தனர் என்று காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply