குஜராத்   மற்ற மாநிலங்களுக்கு முன்உதாரணமாக திகழ்கிறது நரேந்திர மோடியின் துணிச்சல் மிக்க நடவடிக்கைகளால், குஜராத் மாநிலம் வளர்ச்சிப் பணிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்உதாரணமாக திகழ்வதாக அம்மாநில கவர்னர், கமலாபெனிவால், பாராட்டு தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் சட்ட சபை தேர்தல் நடந்தபிறகு , கூடிய முதல் சட்டசபை கூட்டத்தொடரில், கவர்னர் கமலா பெனிவால், உரைநிகழ்த்தினார். அப்போது, நரேந்திரமோடியின் நிர்வாகத்திறமையை, அவர் வெகுவாக பாராட்டினார்.கவர்னர் கமலாபெனிவால் பேசியதாவது:குஜராத் , வளர்ச்சிப்பணிகளில், தற்போது மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. இங்கு, பெரும்மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதல்வர் நரேந்திரமோடியின், துணிச்சலான நிர்வாக திறமையே இதற்குகாரணம்.மோடியின் நிர்வாக திறமைக்கு, சான்றிதழ் அளிக்கும்வகையில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.க ,வை, குஜராத் மக்கள், மீண்டும் ஆட்சியில் அமர்த்தி யுள்ளனர். மோடி, சமீபத்தில் மேற்கொண்ட யாத்திரை, மாநிலத்தில், அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநாட்டியுள்ளது.இவ்வாறு, கமலா பெனிவால் பேசினார்.

Leave a Reply