விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான  தடை உச்ச நீதிமன்றத்தை நாடும் கமலஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தமிழக அரசின் தடைதொடரும் என சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் அறிவித்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தை நாட நடிகர் கமலஹாசன் முடிவுசெய்துள்ளார்.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழகஅரசு விதித்த தடைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல் வழக்குதொடர்ந்திருந்தார். இந்தவழக்கில் அரசு பிறப்பித்த தடையை நீதிபதி வெங்கடராமன் நேற்றிரவு நிறுத்திவைத்ததார்.

இதனால் இன்று படம்வெளியாகும் எனும் சுழ்நிலையில் விஸ்வரூபம் தடைநீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு இன்று காலை மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி தமிழக அரசின் கோரிகையை ஏற்று தனிநீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடைவிதித்தது.வருகிற திங்கட்கிழமைக்குள் தமிழக அரசு பதில் தரவேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், பிப்ரவரி 6 ஆம் தேதி இறுதிவிசாரணை நடைபெறும் என அறிவித்தது.

இதனால் படம்வெளியாவது மேலும் தாமதம் ஆகியுள்ளதால் இந்த தடைஉத்தரவை எதிர்த்து கமலஹான உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கமலஹாசன் முடிவு செய்துள்ளார்.

Leave a Reply